லிங்குசாமியின் புதிய படத்தின் வில்லன் ஆதியா? ஆரியா?

சென்னை : டைரக்டர் லிங்குசாமி கடைசியாக சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். இப்படம் 2005 ம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியாகும். விஷால், கீர்த்தி சுரேஷ்,ராஜ்கிரண் நடித்த இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த லிங்குசாமி, இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். முதல் முறையாக பிரபல தெலுங்கு ஹீரோ ராம் போதினானியை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.

லிங்குசாமியின் மாஸ் ஆக்ஷன் படம்

லிங்குசாமியின் மாஸ் ஆக்ஷன் படம்

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கிறது. RAPO19 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் ஆக்ஷன் படமாக இந்த படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார்.

மாஸ் ஹீரோ என்ட்ரி

மாஸ் ஹீரோ என்ட்ரி

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்ட நிலையில், இந்த படத்தில் இணையும் மற்ற மாஸ் ஹீரோக்கள் பற்றிய தகவலை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

வில்லன் ரோலில் ஆதி

வில்லன் ரோலில் ஆதி

இந்த படத்தில் வில்லனாக பிரபல ஹீரோ ஆதி நடிக்கிறாராம். இதற்கு நன்றி தெரிவித்து ஆதியும் ட்வீட் செய்துள்ளார். அதே சமயம் இந்த படத்தில் வில்லன் ரோலில் பிக்பாஸ் ஆரி நடிக்கிறார் என்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

ஆதியா? ஆரியா ?

ஆதியா? ஆரியா ?

இதற்காக ஆரிக்கு பெரிய தொகை ஒன்று சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் வில்லன் ஆதியா, ஆரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இரண்டு வில்லன்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X