»   »  ஆளப்போறான் தமிழன்... மெர்சலாக்குமா... மிரண்டு நிக்குமா?

ஆளப்போறான் தமிழன்... மெர்சலாக்குமா... மிரண்டு நிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டைம் டு லீட் என்ற உப தலைப்புடன் வந்த விஜய்யின் தலைவா என்ன ஆனது என்பது ஊருக்கே தெரிந்த சமாச்சாரம். தலைவாவுக்குப் பிறகு விஜய்யிடமிருந்து அரசியல் குரல் எதுவும் வரவே இல்லை, ஜெயலலிதா மரணமடைந்த சில தினங்கள் வரை.

Select City
Buy Mersal (U/A) Tickets

அதன் பிறகுதான் அரசி அரசியல், விவசாயிகள் பிரச்சினை என பேச ஆரம்பித்தார் விஜய். அவர் தந்தை ஒருபடி மேலே போய் நாளைய தலைவர் விஜய் என நான்கைந்து மேடைகளில் பேசிவிட்டார்.


Aalaporan Tamilan reflects Vijay's political aspiration?

மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது என அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது தனது அடுத்த படத்தில் 'ஆளப்போறான் தமிழன்...' என ஒரு பாடலை வைத்துள்ளார். அதை நாளை ரிலீசும் பண்ணுகிறார்.


இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்துள்ளது. 'இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு செய்தி சொல்லிவிட்டார் தளபதி' என கருத்துப் பதிகிறார்கள். பேனர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் விஜய் மக்கள் இயக்கக் கொடிகள் வீதிகளில் பறக்க ஆரம்பித்துள்ளன.


Aalaporan Tamilan reflects Vijay's political aspiration?

அப்போது ஜெயலலிதா இருந்தார்; விஜய் அமைதி காத்தார்.. இனி அதற்கு அவசியமில்லையே என்கிறார்கள் நடுநிலையாளர்கள். ஆனால் திரையுலகினரோ, 'ஜெயலலிதாவை விட கடுமையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்தான் இப்போதுள்ளவர்கள். இது தெரியாமல் அரசியல் ஆழம் பார்க்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள்... இப்போது ஆர்வத்துடன் அரசியலுக்கு வருபவர்கள் என்னென்ன சோதனைகளைச் சந்திக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்," என்கிறார்கள்.


எப்படியோ... சேஃபா விளையாடுங்கப்பா!

English summary
Is Vijay's Mersal single Aalaporan Tamilan reflecting Vijay's political aspiration? Here is an analysis
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil