»   »  ஆளுக்கு பாதி 50-50... சிரிப்புக்கு கியாரண்டி இருக்குமா?

ஆளுக்கு பாதி 50-50... சிரிப்புக்கு கியாரண்டி இருக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கண்ணா லட்டு திண்ண ஆசையா... வாலிபராஜா படங்களில் கதாநாயகனாக நடித்த சேது அடுத்து நடிக்கும் நகைச்சுவைப் படம் ஆளுக்கு பாதி 50-50.

இவருக்கு ஜோடியாக 144 படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கதாநாயகி ஒருவரும் நடிக்கவிருக்கிறார்.

இவர்களுடன் பால சரவணன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன், மதன்பாபு, ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுப்பட்டி முனிஷ்கான், யோகி பாபு என பெரிய காமெடிப் பட்டாளங்களுடன் தொடங்கி உள்ளனர்.

Aalukku Paathi 50-50 comedy movie

ஆர்கே பிரதாப் ஒளிப்பதிவு செய்ய, தரன் இசை அமைக்கிறார். ராஜா சேதுபதி எடிட்டிங் செய்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கிருஷ்ண சாய். விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கிருஷ்ண சாய் கூறுகையில், "இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் திரையரங்கு செல்வது அவரவர் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரித்து மகிழவே... அதைத் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளேன்", என்றார்.

சென்னை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

Read more about: sethu சேது
English summary
Aalukku Paathi 50-50 is a comedy movie starring by Sethu after Vaalibaraja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil