twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூன்று அத்தைகளும்… அத்தை பெண்களும் இதுதான் ‘ஆம்பள’…

    By Mayura Akilan
    |

    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.... இந்த படத்திற்கு ஏன் ‘ஆம்பள' என்று பெயர் வைத்தார்கள் என்று. ஆம்பள என்றால் மேன்லி... ‘தில்' என்று ஒரு டிவி பேட்டியில் கூறியிருந்தார் விஷால்.

    ஆனால் அத்தை பெண்களை கரெக்ட் பண்ணுவதும்... சண்டை காட்சியில் பறந்து பறந்து அடிப்பதும் தவிர விஷால் வேறு எதுவும் தில் ஆக செய்வதாக தெரியவில்லை.

    சரி நாம் அந்த கதைக்கு போகவேண்டாம். சரக்கு மிக்சிங் பண்ணுவதில் தம்பியை கண்டுபிடிக்கும் விஷால் தொடங்கி அந்த ஊட்டி கார் சேசிங் வரை சுந்தர்.சியின் அக்மார்க் ரகம் தெரிகிறது.

    Aambala movie nothing special

    சட்டு சட்டென்று வந்து போகும் பாடல்.... அதில் கவர்ச்சி புயலாய் வீசும் ஹன்சிகா ( கண் கூசுகிறது) கொடுத்த காசுக்கு இதுதான் மிச்சம் ( பின் சீட்டில் கமெண்ட்)

    ஆனால் பாடல் எதுவுமே கேட்பது போல இல்லை. சத்தம் காது ஜவ்வை கிழிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையமைத்த பாடல்கள் எதுவுமே கேட்கும்படியாக இல்லை. இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. 2500 ரூபாய்தான் செலவானதாகவும், கூறினார் விஷால். என்னைக் கேட்டால் அதுகூட வேஸ்டுதானோ.

    Aambala movie nothing special

    சரி ஆம்பள படத்தின் கதைக்கு வருவோம்.

    ஊட்டியில் அரசியல் கூட்டத்திற்கு ஆள் அனுப்பும் கம்பெனி நடத்தும் விஷாலுக்கு அழகான, கவர்ச்சியான ஹன்சிகாவை பார்த்த உடனே காதல் வருகிறது. காமெடியன் சந்தானம் ஹன்சிகாவை காதலிப்பதாக கூற நமக்கெல்லாம் பாஸ்தா செட் ஆகாது என்று நீள வசனம் பேசுகிறார் விஷால்.

    அதோடு நமக்கெல்லாம் தனலட்சுமி, வரலட்சுமிதான் செட் ஆகும் என்றும் கூறுகிறார் விஷால். கடைசியில் விஷாலும் ஹன்சிகாவும் விதிவசத்தால் காதலிக்க. அந்த காதலை பிரிக்கிறார் சந்தானம்.

    Aambala movie nothing special

    அந்த சோகத்தில் பாரில் மிதக்கிறார் விஷால். அம்மா சொன்ன கதை மூலம் காணாமல் போன அப்பா பிரபு தேடி மதுரை வர உடன் அப்பாவின் காதலியின் மகனும் வரகிறார்.

    உலகத்திலேயே முதன்முறையாக சரக்கு மிக்சிங் மூலம் ஒன்று சேருகிறது குடும்பம் ( நல்ல அப்பா! நல்ல பையன்கள்!!)

    பிரபுவிற்கு ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகிய மூன்று தங்கைகள், அந்த தங்கைகளுக்கு மூன்று பெண்கள். மூவரையும் திருமணம் செய்து கொண்டால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்று அப்பா கூற பையன்கள் கிளம்புகிறார்கள். அத்தை பெண்களை கடத்துவதற்கு பதிலாக அத்தைகளை கடத்துகிறார்கள். (அதுக்குள்ள இடைவேளை வந்துருச்சே. )

    இடைவேளைக்குப் பின்னர் அத்தைகளையும், அத்தை பெண்களையும் எப்படி மூவரும் கரெக்ட் செய்கின்றனர். வில்லனை எப்படி பந்தாடுகின்றனர் என்பதுதான் மீதி கதை.

    அரண்மனை பார்த்த சூட்டோடு அதையே நம்பி ஆம்பள படம் பார்க்க போனால் ஏமாந்துதான் போகவேண்டும். காமெடிக்கு சந்தானம், சதீஷ் என இரண்டு பேர் இருக்கிறார்கள்.

    பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் கொடுத்த விஷாலுக்கு இது சற்றே சறுக்கல்தான். படம் முடிஞ்சிருச்சே என்று இருக்கும் போது ‘இன்பம் பொங்கும் வெண்நிலா ரீமிக்ஸ்' பாடலை போட ஐயோ ஆளை விடுங்கட என்று வெளியேறுகிறது கூட்டம்.

    இடைவேளையில் காணாமல் போன சந்தானம் கடைசியில் வந்து கிரனுடன் கட்டி புரள்கிறார். சுந்தர்.சியிடம் காதை கடித்த பலன் நிறைவேறிய திருப்தி தெரிகிறது சந்தானத்தின் முகத்தில்.

    மூன்று மாதத்தில் முடித்த படம் என்பதால் பெரிதாக மெனக்கெடவில்லை சுந்தர்.சி.

    இடையில் குஷ்புவை வேறு ஒரு பாட்டுக்கு குத்து போட விட்டிருக்கிறார் சுந்தர்.சி

    மொத்தத்தில் ஆம்பள ஒன்றும் அசத்தவில்லை... ஆளை விட்டால் போதும் என்ற ரகமாகத்தான் இருக்கிறது என்பது ரசிகர்களின் கணிப்பு.

    English summary
    Vishal gets nothing special and nothing new. Sundar C is known for presenting routine formulaic stories laced with unlimited comedy. Aambala is no exception. The only different is that there is nothing to tell as a story and screenplay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X