»   »  ஆமீர் கானை அழ வைத்த சல்மானின் பஜ்ரங்கி பைஜான்

ஆமீர் கானை அழ வைத்த சல்மானின் பஜ்ரங்கி பைஜான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுதாராம் நடிகர் ஆமீர் கான்.

சல்மான் கான் தானே தயாரித்து நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படம் ஒரு காது கேளாத, பேச முடியாத குழந்தையை அவளது குடும்பத்துடன் இணைக்க முயற்சிக்கும் ஒருவனைப் பற்றிய கதை.

இந்தப் படத்துக்கு பாகிஸ்தானில் ஏகப்பட்ட வரவேற்பு.

வித்தியாச சல்லு

வித்தியாச சல்லு

இது சல்மானின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் படம் அல்ல. அமைதியான, நிதானமான சல்மான்.. வசனங்கள் கூட குறைவுதான் அவருக்கு. ஆனால் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

இதுதான் நல்ல நடிப்பு

இதுதான் நல்ல நடிப்பு

சல்மானின் சினிமாக்களில் இந்த திரைபடத்தில்தான் அவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக இப்படத்தைப் பார்த்தவர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆமீர் கண்ணீர்

ஆமீர் கண்ணீர்

சல்மான் கானின் நண்பரும், சக நடிகருமான அமீர் கான் ‘பஜ்ரங்கி பாய்ஜான்' படத்தை பார்த்து விட்டு, கைக்குட்டையில் கண்ணைத் துடைத்தவாறு வெளியேறினாராம்.

பாராட்டு

தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ‘பஜ்ரங்கி பாய்ஜான்' படம் குறித்து கருத்து வெளியிட்டார். அதில், ‘சல்மான் கானின் மிகச்சிறந்த படம்! அவரின் சிறந்த நடிப்பில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்' அமைந்துள்ளதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.

வாழ்த்து

வாழ்த்து

சல்மானை மட்டுமின்றி படத்தின் இயக்குநர் மற்றும் குழந்தை நட்சத்திரத்தையும் அவர் பாராட்டினார். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனமும் சிறப்பாக அமைந்துள்ளது என்றும், தனிச் சிறப்பான கதையை இயக்கிய கபீர் கானுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

நல்ல வசூல்

நல்ல வசூல்

ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட இந்த திரைப்படம் வசூலையும் அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் இந்த திரைப்படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தை பாகிஸ்தான் அரசு அனைவரும் பார்க்கத்தக்க படம் என்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

லிங்கா தயாரிப்பாளர்

லிங்கா தயாரிப்பாளர்

இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் லிங்காவைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமவுலியின் தந்தை

ராஜமவுலியின் தந்தை

இந்தப் படத்தின் கதாசிரியர் யார் தெரியுமா? பாகுபலியை இயக்கிய எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை கேவி விஜயேந்திர பிரசாத்!

English summary
Bollywood top star Aamir Khan has hailed Salman Khan's Bajrangi Bhaijan and mentioned one of the best films of Salman Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil