»   »  படத்திற்காக குண்டாகி நடக்க, மூச்சு விட முடியாமல் திணறும் ஆமீர் கான்

படத்திற்காக குண்டாகி நடக்க, மூச்சு விட முடியாமல் திணறும் ஆமீர் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடிக்கும் படத்திற்காக உடல் எடையைக் கூட்டியதால் மூச்சுவிடவும், நடக்கவும் சிரமப்படுகிறார்.

பாலிவுட்டில் பெர்பெக்ஷனிஸ்ட் அதாவது ஒப்புக் கொள்ளும் வேலையை கச்சிதமாக முடித்துக் கொடுப்பவர் என்று பெயர் எடுத்துள்ளார் ஆமீர் கான். ஒரு படத்தில் நடிக்க அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டார். ஒப்புக் கொண்டால் அதற்கென மெனக்கெடுத்து நடிப்பார் ஆமீர்.

ஆமீரின் தொழில் பக்தியை பார்த்து பலரும் மிரண்டு போயுள்ளனர்.

கஜினி

கஜினி

இந்தி கஜினி படத்திற்காக ஆமீர் கான் ஜிம்முக்கு சென்று தனது உடம்பை கும்மென்று ஆக்கினார். அந்த படத்தின் பாடல்கள் காட்சிகளில் தனது கட்டுக்கோப்பான உடலை காட்டி ரசிகைகளை கவர்ந்தார்.

தூம் 3

தூம் 3

தூம் 3 படத்தில் ஆமீர் கான் 6 பேக்ஸ் வைத்து அசத்தினார். போஸ்டரில் அவர் சட்டை இல்லாமல் நிற்பதை பார்த்தே பல பெண்கள் ஏக்கம் கொண்டனர்.

தங்கால்

தங்கால்

ஆமீர் தங்கால் என்ற படத்தில் இரண்டு பெண்களுக்கு தந்தையாக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் முதல்முறையாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார். மேலும் படத்திற்காக தனது உடல் எடையை 35 கிலோ அதிகரித்துள்ளார்.

சிரமம்

சிரமம்

உடல் எடை அதிகரித்துள்ளதால் ஆமீர் குனிந்து தனது ஷூ லேசை கட்டமுடியாமல் உள்ளாராம். மேலும் அவரால் சரியாக நடக்கவும், ஏன் மூச்சு விடவும் கூட சிரமமாக உள்ளதாம். இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அவரது குடும்பத்தாருக்கு கவலையாக உள்ளதாம்.

English summary
Aamir Khan has gained 35 kilos for his upcoming movie Dangal. The extra kilos are giving him trouble in walking and breathing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil