Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சர்ச்சைகளால் 2வது நாளே பாதியாக சரிந்த அமீர்கான் பட வசூல்...ஏன் என்னாச்சு?
மும்பை : நடிகர் அமீர்கான், நாக சைதன்யா, கரீனா கபூர் நடித்து வெளிவந்துள்ள படம் லால் சிங் சத்தா. ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசான இந்த படத்தில் டைட்டில் ரோலில் அமீர் கான் நடித்திருந்தார். ப்ரீமியர் ஷோ பார்த்து விட்டே திரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி இருந்தனர்.
Tom Hanks நடித்த Forrest Gump என்ற படத்தின் ரீமேக் தான் லால் சிங் சத்தா. பல ஆண்டுகளாக போராடி, பல முறை ஒத்திவைக்கப்பட்டு, ஒது வழியாக ஆகஸ்ட் 11 ம் தேதி தான் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 100 புகழ்பெற்ற இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டது.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லால் சிங் சத்தா படமும், அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டன. இரு படங்களுமே பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருந்தன.
படுதோல்வியடைந்த 25 மெகா பட்ஜெட் திரைப்படங்கள்… அதல பாதாளத்தில் தள்ளாடும் பாலிவுட் திரையுலகம்!

3வது பெரிய ஓப்பனிங்
அமீர்கானின் லால் சிங் சத்தா படம் கடந்த 2 நாட்களில் ரூ.19 கோடிகளை வசூல் செய்துள்ளது. சீக்ரெட் சூப்பர்ஸ்டாப் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இயக்கிய லால் சிங் சத்தா முதல் நாளிலேயே 12 கோடிகளை வசூல் செய்தது. இந்த ஆண்டில் பாலிவுட்டில் ரிலீசான படங்களிலியே 3வது பெரிய ஓப்பனிங் கொடுத்த படம் இது தான்.இதனை சோஷியல் மீடியாவிலும் பலரும் கொண்டாடி வந்தனர்.

2வது நாளே இப்படியா நடக்கனும்
இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் லால் சிங் சத்தா படத்தின் இரண்டாவது கலெக்ஷன் 40 சதவீதம் குறைந்து 6.50 - 7 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதற்கு காரணம் படம் பற்றிய கிளம்பிய சர்ச்சைகள் தான் என சொல்லப்படுகிறது.இதனால் பாலிவுட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய லால் சிங் சத்தா
லால் சிங் சத்தா படத்தில் இந்திய ராணுவம் மற்றும் இந்து மத நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளதாக அமீர்கான் மீது சஞ்சய் அரோரா என்பவர் டில்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த படத்தின் ஒரு காட்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, கார்கில் போரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக காட்டப்பட்டிருக்கும்.

அமீர்கானுக்கு எதிராக புகார்
இதை குறிப்பிட்டு, சிறந்த வீரர்கள் மட்டுமே கார்கில் போரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.கடுமையாக பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே போரில் பங்கேற்றனர். ஆனால் லால் சிங் சத்தா படக்குழுவினர் இந்திய ராணுவம் பற்றி அவதூறு பரப்பும் வகையில், வேறு விதமாக சித்தரித்து காட்டி உள்ளனர் என புகாரில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.