»   »  சல்மானின் பார்ட்டியில் ஆமீரை பார்த்து தெறித்து ஓடிய பாலிவுட் பிரபலங்கள்

சல்மானின் பார்ட்டியில் ஆமீரை பார்த்து தெறித்து ஓடிய பாலிவுட் பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பார்ட்டிக்கு வந்தவர்கள் அங்கிருந்த ஆமீரை பார்த்து மிரண்டனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது வழக்கம். அவரது பார்ட்டிக்கு பல பிரபலங்கள் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள். இந்நிலையில் அண்மையில் சல்மான் தனது மும்பை வீட்டில் ஒரு பார்ட்டி கொடுத்தார்.

Aamir scares guests at Salman Khan's bash

பார்ட்டிக்கு நடிகர் ஷாருக்கான், நடிகை ஆலியா பட் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் வந்திருந்தனர். பார்ட்டிக்கு சல்மான் ஆமீர் என்பவரையும் அழைத்திருந்தார்.

ஆமீர் என்றால் நடிகர் ஆமீர் கான் அல்ல இஸ்ரேலை சேர்ந்த இவர் மக்களின் முகத்தை பார்த்து அவர்களின் விபரங்களை புட்டு புட்டு வைக்கும் கில்லாடி. பார்ட்டிக்கு வந்திருந்தவர்களின் முகங்களை பார்த்து அவர்களின் வாழ்வில் நடந்ததை அப்படியே கூறினார்.

ஆலியா பட் பள்ளியில் படிக்கும்போது அவருக்கு யார் மீது ஈர்ப்பு ஏற்பட்டது என்பதை கூட சரியாக கூறினார் ஆமீர். இதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் ஆமீரிடம் இருந்து தள்ளியே இருந்தனர். எங்கே தங்களின் குட்டு உடைந்துவிடுமோ என்று பலர் அஞ்சினர்.

English summary
Bollywood celebs got shocked by the presence of Israeli Aaamir at Salman Khan's bash in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil