»   »  ரன்பிர் கபூரை அப்பா என நினைத்து கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராயின் மகள்

ரன்பிர் கபூரை அப்பா என நினைத்து கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராயின் மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராயின் மகள் ஒரு நாள் தனது தந்தை என நினைத்து நடிகர் ரன்பிர் கபூரை கட்டிப்பிடித்துள்ளார்.

கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூருடன் சேர்ந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். முக்கோண காதல் கதையான இந்த படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.

படத்தில் ரன்பிர் கபூரின் காதலியாக அனுஷ்கா சர்மா நடித்துள்ளார்.

ஆராத்யா

ஆராத்யா

ஒரு நாள் ரன்பிர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த என் மகள் ஆராத்யா தனது அப்பா என நினைத்து ஓடிப்போய் கட்டிப்பிடித்தார் என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர் அபிஷேக் பச்சனிடம் இருப்பது போன்ற சட்டையும், தொப்பியும் அணிந்ததால் என் மகள் அவரை தனது அப்பா என தவறாக நினைத்து கட்டிப்பிடித்தார். மேலும் ரன்பிருக்கும் அபிஷேக் போன்று லேசான தாடி வேறு என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

அப்பா

அப்பா

அப்பா என நினைத்து தவறுதலாக ரன்பிர் கபூரை கட்டிப்பிடித்ததை என் மகள் உணர்ந்து சிரித்துவிட்டாள். அவளுக்கு ரன்பிர் என்றால் மிகவும் பிடிக்கும் என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ரன்பிரும், ஐஸ்வர்யாவும் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பது பச்சன்களுக்கு பிடிக்கவில்லையாம். இந்நிலையில் பிலிம்பேர் பத்திரிகைக்கு வேறு ரன்பிருடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்.

English summary
Aishwarya Rai Bachchan revealed that, her daughter thought Ranbir was her dad! Aishwarya Rai Bachchan said, ''One day she just ran into his arms. Because he was wearing this jacket and cap like AB (Abhishek Bachchan) and he had the stubble. Thinking he's AB she hugged him and Ranbir was like aww!''

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil