»   »  'ஆரண்யம்'.... சாலக்குடிகாடு முதல் தாய்லாந்து காடுவரை!

'ஆரண்யம்'.... சாலக்குடிகாடு முதல் தாய்லாந்து காடுவரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காடும் காடு சார்ந்த இடங்களில் நடக்கும் காதல் கதையாக 'ஆரண்யம்' படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தைப் புதுமுக இயக்குநர் குபேர்.ஜி இயக்கியுள்ளார்.

Aaranyan, movie on forest love life

''பொறுப்பில்லாத நான்கு வாலிபர்களுக்கு ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதுதான் முழுநேரத் தொழில். ஜாலியாக இருக்க ஒரு சிறுதிருட்டில் ஈடுபடுகிறார்கள்.அப்படி ஒரு செல்போனைத் திருடிவிடவே அதன் விளைவு விபரீதமாகி விடுகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு காட்டுக்கு ஒடுகிறார்கள். முடிவு என்ன என்பதே கதை. இது காடு சார்ந்த காதல் கதை. புதியதளம்.‘காதலிக்கநேரமில்லை' படத்தில் நாகேஷ் சொல்லும்ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் நினைவாக எங்கள் கம்பெனிக்கு அதையே பெயராக வைத்து படத்தை 60 நாட்களில் படத்தை எடுத்துள்ளோம்,'' என்கிறார் இயக்குநர் குபேர்.ஜி .

புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து,ஸ்ரீஹேமா,தீப்பெட்டி கணேசன், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ‘அன்னக்கொடி' புகழ் சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம்.

Aaranyan, movie on forest love life

டெலிபிலிமாக எடுக்க நினைத்த ஒரு கதையை படமாகவே எடுக்கலாம் என்று நண்பர்கள் ஊக்கம் தந்திருக்கிறார்கள். ஒருவர் தயாரிக்கவே முன்வந்திருக்கிறார். அவர்தான் இப்படத்தின் நாயகனாகியுள்ள ராம். இவருடன் சுபாஷ், தினேஷ், நானக் என நண்பர்கள் இணைந்து தயாரிக்க முன்வரவே படத்தை முடித்துள்ளனர்.இ ப்படத்தை ‘ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் ‘சார்பில் தயாரித்து உள்ளனர்.

Aaranyan, movie on forest love life

புதுக் கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள்,விராலி மலை, சாலக்குடி, திரிச்சூர் மட்டுமல்ல தாய்லாந்து காடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

'குனிஞ்சாக்க பர்சடிப்போம்; அசந்தாக்க பல்டியடிப்போம். அசந்தநேரம் அடிக்கிறது எங்கள் பாலிசி', என்கிற குத்துப் பாடலை ஏகாதசி எழுத, 'காதல் மாயவலை', 'மறைஞ்சி கிடந்த உலகமே 'போன்ற மற்ற4 பாடல்களை மீனாட்சி சுந்தரம் எழுதியிருக்கிறார். இவர் பா.விஜய்யின் உதவியாளர்.

Aaranyan, movie on forest love life

''நிச்சயம் இப்படம் புதிய அனுபவமாக இருக்கும். நண்பர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். எதிர்பார்ப்பில்லாமல் வருபவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் மனத் திருப்தி யளிக்கும் சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் படத்தை முடித்து இருக்கிறோம். புதியதை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இதையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார் குபேர்.ஜி .

வரும் 20 ஆம் தேதி 'ஆரண்யம்' வெளிவர விருக்கிறது.

Read more about: aaranyam, ஆரண்யம்
English summary
Aaranyam is a new love thriller based on forest life will hit the screens on Nov 20th.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil