அசத்துறாரே ஆரி.. அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கும் ரிலீஸ்.. பிக் பாஸ் பிரபலம் தான் ஹீரோயினே!

சென்னை: நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனனின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஆரி அர்ஜுனாவின் பகவான் ஃபர்ஸ்ட் லுக் பிக் பாஸ் வீட்டில் வெளியான நிலையில், தற்போது நடிகர் ஆரி அர்ஜுனனின் அடுத்த படமான அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் போட்டியாளரான நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.

அலேகா ஃபர்ஸ்ட் லுக்

ஹேண்ட்சம் ஹீரோவாக ஆரி வெள்ளை நிற ஷர்ட், டக்கின் பண்ணி, டை அணிந்து கருப்பு நிற பேன்ட் அணிந்து செம ஷார்ப்பாக பார்க்கும் அதிரடியான அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராஜமித்ரன் இயக்கி உள்ளார். ஆரியின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்டு சர்வாதிகாரியாக கலக்கிய நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக வீடியோ கால் மூலம் பேசிய நடிகை ஐஸ்வர்யா தத்தா, நம்ம படத்தோட அப்டேட் எப்போ வரும் ஆரி என கேட்டிருந்த நிலையில், இப்போ அப்டேட் வந்துள்ளது.

மிரட்டிய பகவான்

மிரட்டிய பகவான்

சமீபத்தில் நடிகர் ஆரி அர்ஜுனா நடிப்பில் உருவாக உள்ள பகவான் தி ஃபர்ஸ்ட் இலுமினாட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீசாகி பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த படத்தின் மோஷன் போஸ்டரை பிக் பாஸ் வீட்டிலேயே ஆரி வெளியிட்டார். சக ஹவுஸ்மேட்களும் பாராட்டித் தள்ளினர்.

மக்கள் பலம்

மக்கள் பலம்

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அர்ஜுனனுக்குத் தான் அதிகப்படியான ரசிகர்கள் பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹவுஸ்மேட்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப வார வாரம் நாமினேட் செய்தாலும், ரசிகர்கள் ஓட்டுப் போட்டு முதல் ஆளாக அவரை தொடர்ந்து சேவ் செய்து வருகின்றனர். இந்த வாரம் கேப்டனாக இருப்பதால் ஆரி ஆர்மிக்கு ரெஸ்ட்.

ஆபாச ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தாவின் கால்கள் படுக்கையறையில் பின்னி பிணைந்து இருக்கும் படி ஏற்கனவே வெளியான படத்தின் டைட்டில் லுக் போஸ்டருக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. ஆரிக்கு இருக்கும் மாஸ் காரணமாக தற்போது அவரை வைத்து படத்தின் புரமோஷனை அதிகரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் ரிலீசாகுமா

பிக் பாஸ் வீட்டில் ரிலீசாகுமா

பகவான் ஃபர்ஸ்ட் லுக்கை போலவே இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனாவின் அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் செய்யப்படுமா? என்கிற கேள்வியும், ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற ரசிகர்களின் கோரிக்கையும் எழுந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் நேற்றே வெளியிட்ட நிலையில் தான் இன்று சமூக வலைதளங்களில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

அப்படியே லாஸ்லியா படமும்

அப்படியே லாஸ்லியா படமும்

அலேகா, பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அப்படியே தலைவி லாஸ்லியாவும் ஆரியும் நடித்து வந்த அந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் ரிலீஸ் செய்யுங்கள் என ஆரி ஆர்மியினர் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X