Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னராக ஆரி வெற்றி பெற்றதும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ஆரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆரி போட்ட ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
இந்த சீசனில் ஆரி டைட்டில் வின் பண்ணுவார் என கமல்ஹாசனே நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
ஆனால், அத்தனை தடைகளையும் மீறி நேர்மை ஆயுதத்தால் மக்களின் ஓட்டுக்களை அள்ளி வெற்றி பெற்றார் ஆரி.

10 கோடி வித்தியாசத்தில்
இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜி முருகதாஸ் 6 கோடி வாக்குகளை பெற்ற நிலையில், முதல் இடத்தை பெற்ற ஆரி அர்ஜுனன் யாருமே கிட்டவே நெருங்க முடியாத அளவுக்கு 16 கோடி வாக்குகள் பெற்று இந்த சீசன் டைட்டில் வின்னராக முடி சூடினார். பாலாவுக்கும் ஆரிக்குமே கிட்டத்தட்ட 10 கோடி வாக்குகள். பாலா, சோம், ரம்யா மற்றும் ரியோவின் வாக்குகளை சேர்த்தால் தான் ஆரி வாங்கிய வாக்குகளுக்கு சமன் செய்ய முடியும்.
|
இது மக்களின் வெற்றி
பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணதும் சமூக வலைதளத்தில் வீடியோ போட்ட ஆரி, இது என்னுடைய வெற்றி அல்ல இது மக்களின் வெற்றி, உழைக்கும் வர்க்கத்தின் வெற்றி என்றார். தனக்கு வாக்களித்து பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என்றும் கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு
ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி நேற்று வரலாற்று வெற்றிப் பெற்றதை ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கொண்டாடி வாழ்த்தி வந்தனர். நடிகர் ஆரி அர்ஜுனன், இந்திய கிரிக்கெட் அணியை எப்போதுமே சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.. என்னவொரு வெற்றி என வாழ்த்தி ட்வீட் போட்டதும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.

ஹரிஷ் கல்யாணுக்கு நன்றி
நடிகரும் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளருமான ஹரிஷ் கல்யாண், ஆரியின் வெற்றியை கொண்டாடும் விதமாக மக்களின் விருப்பமானவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும், பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யாவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். தற்போது ஹரிஷ் கல்யாணின் ட்வீட்டுக்கு உங்கள் அன்புக்கு நன்றி என ஆரி ட்வீட் போட்டுள்ளார்.

சாந்தனுவுக்கு நன்றி
என் நண்பன் ஆரியை எனக்கு 15 வருடமாக தெரியும், இந்த சினிமா துறையில் ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் நபராகவே இத்தனை ஆண்டுகள் அவர் இருந்துள்ளார். இந்த சீசன் டைட்டிலை ஆரி வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் சாந்தனு பதிவிட்ட ட்வீட்டுக்கு பதில் அளித்த ஆரி, நன்றி நண்பா, எப்போதுமே நல்ல நண்பராக நீங்கள் என் பக்கம் இருப்பதற்கு நன்றி என்றுள்ளார்.

இயக்குநர் அறிவழகன்
ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் வாழ்த்துக்கள் ஆரி, இந்த வெற்றியை நீங்கள் அடைய முற்றிலும் தகுதியுடையவர். பணத்தை விட நீங்க இப்போ மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள் என வாழ்த்தினார். அவருக்கும் ஆரி நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபிரியா வாழ்த்து
நடிகை ஸ்ரீபிரியா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து, அதை விமர்சித்தும் வருகிறார். ஆரி வெற்றி பெற்றதை தொடர்ந்து வாழ்த்துக்கள் ஆரி மற்றும் ரன்னர் அப்பாக தேர்வான பாலாவுக்கும் வாழ்த்துக்கள் என போட்ட ட்வீட்டுக்கு, நன்றி ஸ்ரீபிரியா மேடம் என நன்றி தெரிவித்துள்ளார் ஆரி.

ட்ரூ வாரியர்
உங்களோட போட்டிப் போட்டதில் ரொம்பவே பெருமைப் படுறேன். எங்களை எல்லாம் நீங்க பெருமைப் பட வச்சிட்டீங்க ஆரி புரோ என சனம் ஷெட்டி ஆரியை வாழ்த்த, நன்றி சனம் எப்போதுமே என் பக்கம் நின்றதற்கு, நீங்க ஒரு ட்ரூ வாரியர் என ட்வீட் போட்டு நன்றி தெரிவித்துள்ளார். ஆரியின் இந்த நன்றி ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்களின் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஹேட்டர்களின் கதறல்களும் தொடர்கின்றன.