»   »  மெரீனாவில் தடுத்தாலும், மலையாள மக்களுடன் ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்!

மெரீனாவில் தடுத்தாலும், மலையாள மக்களுடன் ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வளர்ந்து வரும் இளம் நடிகரான அபி சரவணன், ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்காக மே 18 அன்று மலையாள மக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

வளரும் நடிகராக இருந்தாலும் சமூக நிகழ்வுகளில் தொடர்ந்து காட்டிவருகிறார் அபி சரவணன். மதுரை தமுக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் 7 நாட்களுக்கும் மேலாகக் கலந்துகொண்டார். நெடுவாசலில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு, அந்நிய குளிர்பானங்களை எதிர்த்து தாமிரபரணீயில் நடந்த போராட்டம், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுகொல்லப்பட்டபோது நடந்த போராட்டம்... என அனைத்துப் போராட்டங்களிலும் அபி சரவணனை முதல் ஆளாகப் பார்க்க முடியும்.


Abhi Saravanan pays tribute to Tamils killed in Genocide

டெல்லியில் மாதக்கணக்கில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாகக் கலந்து கொண்டார். அந்த போராட்டத்தின்போது உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு திரையுலகினர் மூலமாக நிதியுதவியும் கூட பெற்றுத் தந்தார்.


மே-18 என்பது தமிழீழத்தில் உயிரிழந்த நமது தமிழினத்திற்கு அஞ்சலி செலுத்தும் நாள். தற்போது இயக்குனர் சுபீர் இயக்கிவரும் 'பிரிட்டிஷ் பங்களா' என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அபி சரவணன் அங்குள்ள படக்குழுவினரோடு சேர்ந்து உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


அங்கு படப்படிப்பு தளத்தில் இருந்தவர்களில் அபி சரவணனை தவிர மற்ற அனைவரும் மலையாளிகள். ஆனால் அபி சரவணனின் வேண்டுகோளை ஏற்று மெழுகு ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஆனால் தமிழகத்திலோ மெரீனாவில் கூடி அஞ்சலி செலுத்த முயன்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியும்தானே!

English summary
Upcoming actor Abhi Saravanan has remembered May 18, the Tamil Genocide in Eelam, at the sets of British Bangalow with Malayalam artists.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil