»   »  காத்து வாங்கும் தியேட்டர்கள்: ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை ரத்து செய்த அபிராமி ராமநாதன்

காத்து வாங்கும் தியேட்டர்கள்: ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை ரத்து செய்த அபிராமி ராமநாதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அபிராமி மெகா மால் தியேட்டர்களில் சினிமா டிக்கெட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. 100 ரூபாய்க்கு மேலான சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

Abhirami Ramanathan cancels online booking charge of movie tickets

சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரூ. 120க்கு விற்பனையான சினிமா டிக்கெட்டுகள் தற்போது ரூ. 153க்கு விற்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 30 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் வரியை நினைத்து பயந்து தியேட்டருக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

வார இறுதி நாட்களில் கூட தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இந்நிலையில் அபிராமி மெகா மால் தியேட்டர்களின் உரிமையாளரான அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்து விட்டது. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 30 சதவீதம் செலவாகிறது.

எனவே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. ரசிகர்கள் பாதிக்காமல் இருக்க அபிராமி மாலில் ஆன்லைன் முன் பதிவு கட்டணத்தை ரத்து செய்கிறேன். இது மற்ற தியேட்டர்களுக்கு முன் மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
As GST has affected theatre owners, Abhirami Ramanathan has cancelled the online booking charge of movie tickets.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil