»   »  உன்னோடு கா... அபிராமி ராமநாதன் தயாரிக்கும் புதிய படம்!

உன்னோடு கா... அபிராமி ராமநாதன் தயாரிக்கும் புதிய படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல திரையரங்க உரிமையாளரும் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் தயாரிக்கும் புதிய படத்துக்கு உன்னோடு கா என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதில் நாயகனாக ஆரி நடிக்கிறார்.

இதுகுறித்து ஆரி கூறுகையில், "என் மகிழ்ச்சியை சொல்லில் சொல்லி அளவிட முடியாது. அபிராமி திரை அரங்குகளின் உரிமையாளர் ராமநாதன் சாரிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் சற்று பதற்றமாய் தான் இருந்தது. ஆனால் அது அவர் படத்தில் நடிக்கக் கேட்டு என்பதைத் தெரிந்து கொண்டவுடன் என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. வளரும் நடிகனான எனக்கு அவரது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து நடிக்க அழைப்பு வந்து இருப்பதில் மிக மிக பெருமை.

Abhirami Ramanathan's new movie Unnodu Ka

'உன்னோடு கா' என்று தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தில் நான் பிரபு சாருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நகைச்சுவை கலந்த காதல் கதையான 'உன்னோடு கா' படத்தில் எனக்கு இணையாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

திறமையான புதிய இயக்குனர் ஆர் கே, சென்னை 28, மங்காத்தா ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், எங்கேயும் எப்போதும் படத்தின் இசை அமைப்பாளர் சத்யா, என்று ஒரு திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களோடு இந்தப் படத்தில் இணைந்திருப்பது 'உன்னோடு கா' படத்துக்கு நிச்சயம் நல்ல எதிர்ப்பார்ப்பை உண்டாக்கும்.

பிரபுவுடன் ஊர்வசியும் இணைந்து நடிப்பது 'உன்னோடு கா' படத்தின் பலத்தை கூட்டும். மனோபாலா, மன்சூர் அலி கான் என்று ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.இந்த மாதம் இறுதியில் 'உன்னோடு கா' படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக, குடும்பத்தோடு வந்து ரசிக்கக் கூடியப் படமாக இருக்கும் 'உன்னோடு கா'," என்றார்.

English summary
Veteran Producer and Theater owner Abhirami Ramanathan is making a movie titled Unnodu Ka with Aari in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil