நேற்று கேப்டன்...இன்று பெஸ்ட் ஸ்டூடண்ட்...ஆச்சரியப்பட வைத்த அபினய்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக எட்டாவது வாரத்தை அடைந்துள்ளது. இதில் வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர் அபினய் வட்டி. இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் தம்பதியான ஜெமினி கணேசன் மற்றும் சாவத்ரி ஆகியோரின் பேரன் ஆவார்.

கமலஹாசனின் சிபாரிசின் பேரில் தான் அபினய் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாக தகவல்கள் வெளியாகின. டாப் நடிகர் குடும்பத்தின் வாரிசு என்பதால் அதிக எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக அபினய் இருந்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல் ஆரம்பம் முதலே அமைதி காத்து வந்தார்.

 விளையாட துவங்கிய அபினய்

விளையாட துவங்கிய அபினய்

ஒவ்வொரு வாரமும் கமல் பேசி, பேசி மோட்டிவேட் செய்த பிறகு சிறிது குரலை உயர்த்தி பேசி, சண்டையிட்டு, டாஸ்க் விளையாடி தானும் வீட்டில் இருப்பதை காட்ட துவங்கி உள்ளார். இருந்தாலும் இவர் ஒருதலைபட்சமாக, தனக்கு வேண்டியவர்களுக்காக மட்டும் விளையாடுவதாக வீட்டில் உள்ள பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கவனத்தை ஈர்க்கலியே

கவனத்தை ஈர்க்கலியே

முதல் நாளில் நடத்தப்பட்ட ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் துவங்கி, 50 வது நாள் வரை ஹவுஸ்மேட்களின் கவனத்தை ஈர்க்க தவறினார். இதனால் நிகழ்ச்சி துவங்கியது முதல் அனைத்து வாரங்களும் அபினய் நாமினேஷனில் இருந்து வந்தார். நாமினேட் செய்யப்பட்டவர்கள் பெயர்களை பிக்பாஸ் அறிவிக்கும் போது, மற்றும் அபினய் என கூறுவார். இதை வைத்தே பலரும் இவரை கலாய்த்து வந்தனர்.

கேப்டனான அபினய்

கேப்டனான அபினய்

இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் டாஸ்க் நடத்தப்பட்டது. மொத்தம் 6 பேர் போட்டியிட்ட இந்த டாஸ்க்கில் கடைசி வரை தாக்குபிடித்து, இந்த வார கேப்டன் ஆகி உள்ளார் அபினய். ஏற்கனவே ஒரு முறை அபினய் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இசைவாணி தன்னிடம் இருந்த காயின் பவரை பயன்படுத்தி அபினய்யின் கேப்டன் பதவியை பறித்து, தான் கேப்டனானார்.

நாமினேஷனில் கிடையாது

நாமினேஷனில் கிடையாது

ஆனால் இந்த வாரம் நிரூப் மற்றும் பாவ்னி காயின் பவரை பயன்படுத்த விரும்பாததால் அபினய் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனால் இந்த வாரம் அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். முதல் முறையாக அபினய் நாமினேஷனில் இல்லாமல் இருந்ததை மற்ற போட்டியாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

பெஸ்ட் ஸ்டூடண்ட்

பெஸ்ட் ஸ்டூடண்ட்

நேற்று கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட அபினய், இன்று நடைபெற்ற லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தினம் ஒருவரை சிறந்த மாணவராக தேர்வு செய்து பேட்ஜ் வழங்க வேண்டும் என பிக்பாஸ் கூறி இருந்தார். இவர்களில் யார் அதிக பேட்ஜ் வைத்துள்ளார்களோ அவர்களே வெற்றியாளர் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் பெஸ்ட் ஸ்டூடண்டிற்கான முதல் பேட்ஜை அபினய் பெற்றுள்ளார்.

ஆச்சரியப்பட வைத்த அபினய்

ஆச்சரியப்பட வைத்த அபினய்

வீட்டில் இருந்த இடமே தெரியாமல் இருந்த அபினய் அடுத்தடுத்த நாட்களில் முன்னேறி வருவதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். கமல் சப்போர்டில் தான் அபினய் இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருப்பதாக கூறப்பட்டு வந்த கருத்தை பொய்யென மாற்றி உள்ளார் அபினய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X