வெளியேற தயாரான அபிஷேக் ராஜா...சேவ் பண்ண துடித்த ஹவுஸ்மெட்ஸ்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நிகழ்ச்சியின் 21 ம் நாளான இன்று இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற்றது. இதில் கேப்டன்சி டாஸ்க் பற்றி கமல் பேசினார். ராஜுவின் மிமிக்ரி திறமையை கமல் பாராட்டினார்.

இந்த வாரம் மொத்தம் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் இசைவாணி, தாமரை, அக்ஷரா, பாவனி ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக நேற்று கமல் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று பிரியங்கா மற்றும் அபினய் முதலில் காப்பாற்றப்பட்டனர். இதனால் ஐக்கி, அபிஷேக், சின்ன பொண்ணு ஆகிய மூன்று பேரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

வெளியேறிய அபிஷேக்

வெளியேறிய அபிஷேக்

ஆனால் வழக்கமான சஸ்பென்ஸ் ஏதும் வைக்காமல் சட்டென்று ஐக்கியை காப்பாற்றுவதாக சொன்ன கமல், வெளியேற போகிறவர் யார் என்பதற்கான கார்டை கையில் வைத்துக் கொண்டு, அங்கிருந்து எனக்கு சேதி வந்து விட்டது. மக்களின் தீர்ப்பை தலைவணங்குபவன் நான் எனக் கூறி அபிஷேக்கின் பெயர் உள்ள கார்டினை கேமிரா முன் காட்டினார் கமல்.

சேவ் செய்ய துடித்த போட்டியாளர்கள்

சேவ் செய்ய துடித்த போட்டியாளர்கள்

இதை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பாவனி, அபினய் உள்ளிட்டோர் தங்களிடம் உள்ள காயினை வைத்து அபிஷேக்கை காப்பாற்ற துடித்தனர். எவிக்ஷனுக்கும் காயினுக்கும் தொடர்பு இருப்பதாக கமல் கூறினார். அதனால் பொறுமையாக இரு உன்னை மக்கள் வெளியேற்ற மாட்டார்கள். நீ இல்லாமல் வீடு நன்றாக இருக்காது என்றார் நிரூப்.

காயின் தயவால் நான் இருப்பதா

காயின் தயவால் நான் இருப்பதா

ஆனால் ஹவுஸ்மெட்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுத்த அபிஷேக், மக்கள் என்னை வெளியே அனுப்ப ஓட்டளித்துள்ளனர். ஒரு காயின் தயவால் நான் தொடர்ந்து இந்த வீட்டிற்குள் இருந்தால் அது எனக்கு அசிங்கம். அப்படி இருந்தால் என் சுயமரியாதை, திறமை எல்லாம் என்ன ஆவது என்றார். அதே சமயம் கமல், அபிஷேக்கின் பெயரை அறிவித்ததும் கண்ணீர் விட்டு அழுதார் பிரியங்கா.

விளக்கம் தந்த பிக்பாஸ்

விளக்கம் தந்த பிக்பாஸ்

பாவனி தன்னிடம் உள்ள காயினை எடுத்துக் கொண்டு வந்து, அபிஷேக்கிடம் கொடுத்தார். தொடர்ந்து பிக்பாஸ் ஏதாவது சொல்லுங்க என கேட்டார். அப்போது பேசிய பிக்பாஸ், இந்த காயினின் பெயரை இப்போது பயன்படுத்த முடியாது. நாமினேஷனின் போது தான் பயன்படுத்த முடியும் என்றார்.

கண்ணீர் விட்ட பிரியங்கா

கண்ணீர் விட்ட பிரியங்கா

இதனால் அபிஷேக் வெளியேற போவதை நினைத்து பிரியங்கா, அபினய் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர். உனக்கு ஏன் மக்கள் ஓட்டளிக்கவில்லை என பிரியங்கா, அபிஷேக்கிடமே கேட்டார். தெரியவில்லை. ஆனால் மக்கள் தீர்ப்பு என்றார் அபிஷேக். அனைவரின் கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அபிஷேக்.

ஆண்டவர் பெயரை சொல்வார்

ஆண்டவர் பெயரை சொல்வார்

கமலிடம் மேடைக்கு சென்று பேசிய போது, வார இறுதியில் ஆண்டவர் என் பெயரை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எல்லாம் செய்தேன். என் ஃபிரண்ஷிடம் கூட சொல்லி விட்டு வந்தேன். ஆண்டவர் என் பெயரை ஒவ்வொரு வாரமும் சொல்வார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X