twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மா மரணமடைந்த தகவலை கேட்டும் தயாரிப்பாளருக்காக நடித்துக்கொடுத்த ஆரி.. கலங்க வைத்த கதை!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி தனது அம்மா குறித்தும் தான் கடந்து வந்த பாதை குறித்தும் பல சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

    Recommended Video

    The first big fight of Big Bigg Boss Tamil | promo 1

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சக போட்டியாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

    அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் அனுபவங்களை மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கருப்பு தான் அழகு.. நிஷாவுக்கு சப்போர்ட் பண்ண வனிதா விஜயகுமார்.. என்ன சொன்னாங்க தெரியுமா?கருப்பு தான் அழகு.. நிஷாவுக்கு சப்போர்ட் பண்ண வனிதா விஜயகுமார்.. என்ன சொன்னாங்க தெரியுமா?

     நான் படிக்கவில்லை

    நான் படிக்கவில்லை

    அந்த வகையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஆரி, பத்து வருடங்களாக தான் பட்ட கஷ்டங்களை உருக்கமாக கூறினார். ஒரு அண்ணன் இன்ஜினியர், ஒரு அண்ணன் லாயர், அக்கா எம்ஏ பிஏட். நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேன். கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து அதையும் கற்றேன்.

     விருது வாங்கியது

    விருது வாங்கியது

    நான் இப்படி இருப்பதை பார்த்து சோம்பேறியாகி விட்டேன் என்று நினைத்துவிட்டார். நான் சென்னைக்கு போகிறேன் என்றேன். எனக்கு சிறுவயதில் போட்ட செயினை விற்று பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். சென்னைக்கு வந்தேன். ஆடும் கூத்து என்ற படத்தில் நடித்தேன் அந்த படம் விருது வாங்கியது. ஆனால் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை.

     புத்தி சுவாதினம்

    புத்தி சுவாதினம்

    நான் நடிக்க தொடங்கிய பிறகு என் அம்மா வந்தார். என் படத்தை பார்த்து விட்டு அப்பா இருந்தா நல்லாருக்கும்ல டா என்று கலங்குவார். திடீரென ஒரு நாள் அம்மா தூங்கி எழுந்து அப்பா எங்கேடா சொல்லிட்டு போனார். இன்னும் வரலை என்று அப்பா இறந்து பல ஆண்டுகள் கழித்து அப்படி பேச தொடங்கிவிட்டார்.

     படியில் விழுந்தார்

    படியில் விழுந்தார்

    பின்னர் ஆசுவாசப்படுத்தி அப்பாதான் இறந்து விட்டாரே என்றேன்.. தூக்கத்தில் இருந்தேன்.. என்னவோ தெரியவில்லை என்றார். அடிக்கடி பாத்ரூமில் மயங்கி விழுந்துவிடுவார். ஒரு முறை ஒருவர் எனக்கு கதை சொல்ல வந்த போது மாடி படியில் தவறி விழுந்தார்.

     குழந்தையை போல்

    குழந்தையை போல்

    சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அதன் பிறகு ஒரு குழந்தையை போன்றுதான் இருந்தார். அவருக்கு செலவு செய்ய பணம் இல்லை. என் அசிஸ்ட்டெண்ட்டை வைத்துதான் பார்த்துக் கொண்டேன்.

     அம்மா இறந்துவிட்டார்

    அம்மா இறந்துவிட்டார்

    படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கடைசி நாள் ஷுட்டிங், பிப்ரவரி 5ஆம் தேதி என் மகள் பிறக்கிறாள். 24ஆம் தேதி அம்மா இறந்துவிட்டார். அதை என் அசிஸ்டெண்ட் வந்து என்னிடம் சொல்கிறார். இதனை கேட்ட இயக்குநர் நீங்க போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு வாங்க என்றார்.

     முடித்து விட்டு போனேன்

    முடித்து விட்டு போனேன்

    நான் வேண்டாம் சார், 20 லட்சம் ரூபாய் செலவு செய்து செட் போட்டு வீணாக வேண்டாம். நான் நடிக்க வேண்டும் என்றுதான் என் அம்மா ஆசைப்பட்டார். ஆகையால் நான் நடித்து முடித்துக்கொடுத்து விட்டே போகிறேன் என்று நடித்தேன். முடித்துவிட்டுதான் போய் எல்லாவற்றையும் செய்தேன்.

     கலங்கிய ஆரி

    கலங்கிய ஆரி

    அதைக் கூட ஒரு ஊடகத்தில் தவறாக எழுதினார்கள். தாயின் மரணத்தில் ஆதாயம் தேடும் நடிகர் என்று. அது ரொம்ப வலியை கொடுத்தது. பின்னர் அவரிடம் இப்படி எழுதிருக்கிறீர்களே என்று கூட கேட்டேன் என கண்கள் கலங்க உருக்கமாக பேசினார் ஆரி. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில்தான் எல்லோரும் வந்திருக்கோம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    English summary
    Actor Aari Speech about his past was heart felting. Aari is in Biggboss season 4.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X