»   »  பெண்ணுக்கு நிர்வாண செல்ஃபி அனுப்பிய நடிகர் அஜாஸ் கான் கைது

பெண்ணுக்கு நிர்வாண செல்ஃபி அனுப்பிய நடிகர் அஜாஸ் கான் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகரும், மாடலுமான அஜாஸ் கான் பெண் ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.

நடிகரும், மாடலுமான அஜாஸ் கான்(34) சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர். சில இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மும்பை மால்வானி பகுதியை சேர்ந்த 38 வயதான விவாகரத்தான பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியுள்ளார் கான்.

இதையடுத்து ஃபேஸ்புக் மூலம் பேசிப் பழகிய அவர்கள் தங்கள் செல்போன் எண்களை மாற்றிக் கொண்டனர்.

பணம்

பணம்

அந்த பெண் நகைகள், உடைகள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது வியாபாரத்திற்கு பணம் தேவை என கானிடம் கூறியுள்ளார். அவரும் தன்னை சந்திக்க வருமாறு தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

அந்த பெண்ணும் கானை சந்திக்க சென்றபோது அவர் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் சந்திக்க முடியவில்லை. அதன் பிறகு கான் போன் செய்து அழைத்தபோது அந்த பெண் செல்லவில்லை.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

சந்திப்பு நடக்காவிட்டாலும் இருவரும் வாட்ஸ்ஆப்பில் பேசி வந்துள்ளனர். வாட்ஸ்ஆப்பில் கான் வைத்திருந்த ப்ரொபைல் புகைப்படத்தை பார்த்த அந்த பெண் அது நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆபாச செல்ஃபி

ஆபாச செல்ஃபி

கான் அந்த பெண்ணுக்கு தன்னுடைய நிர்வாண செல்ஃபியை அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

கைது

கைது

அந்த பெண்ணின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சனிக்கிழமை நள்ளிரவு கானை கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

English summary
Mumbai police arrested actor cum model Ajaz Khan for sending obscene picture to a woman through whatsapp.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil