»   »  ‘அம்மா’ உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!

‘அம்மா’ உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கேரியாவில் இருந்து தமிழகம் திரும்பிய நடிகர் அஜித், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அதிகாலை தனது மனைவியுடன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அவரது உடல் ராஜாஜி ஹாலில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் என திரண்டு வந்து ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நல்லடக்கம்...

நல்லடக்கம்...

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஜெயலலிதாவின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஜித் இரங்கல்...

அஜித் இரங்கல்...

இதற்கிடையே, சிறுத்தை சிவா இயக்கத்தில் பல்கேரியாவில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவ்ர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்னும் செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது" என வேதனை தெரிவித்திருந்தார்.

நேரில் அஞ்சலி செலுத்த...

நேரில் அஞ்சலி செலுத்த...

மேலும், அறிக்கையோடு நின்று விடாமல், உடனடியாக ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அங்கிருந்து புறப்பட்டார் அஜித். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என அவருக்கு தகவல் தெரிவிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல், உடனடியாக விமானத்தில் அவர் தமிழகத்திற்கு புறப்பட்டார்.

மனைவியுடன்...

மனைவியுடன்...

இதனால், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனபோதும் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அஜித் நேரடியாக ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தனது மனைவி ஷாலினியுடன் சென்றார். பின்னர் அங்கு தனது அஞ்சலியை அவர் செலுத்தினார்.

முதல்வருடன் சந்திப்பு...?

முதல்வருடன் சந்திப்பு...?

இன்று அவர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரில் இரங்கல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோவுக்கும் அஞ்சலி...

சோவுக்கும் அஞ்சலி...

ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், அஜித் மறைந்த பத்திரிகையாளர் துக்ளக் சோ.ராமசாமி உடலுக்கும் அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Actor Ajith today went to Jayalalithaa's burial place with his wife and paid tribute to her soul .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil