தொடரும் சோகம்.. நடிகர் அர்ஜுனின் அம்மா லட்சுமி தேவம்மா காலமானார்… பிரபலங்கள் இரங்கல்
பெங்களூரு: ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் நடிகர் அர்ஜுனின் அம்மா லட்சுமி தேவம்மா காலமானார். அவருக்கு வயது 85.
உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மூத்த கன்னட நடிகர் சக்திபிரசாத்தின் மனைவியான லக்ஷ்மிதேவி வயது தொடர்பான நோய்களாலும் அவதிப்பட்டு வந்தார்.

அர்ஜுன்
1981ம் ஆண்டு சிம்மடா மாறி சைன்யா எனும் கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன். 1984ம் ஆண்டு இயக்குநர் ராமநாராயணன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நன்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அர்ஜுன். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், முதல்வன் படங்கள் அர்ஜுனுக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தை வழங்கியது. இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 59 வயதாகும் நடிகர் அர்ஜுனின் அம்மா தற்போது காலமான துக்க செய்தி ரசிகர்களையும், சினிமா துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அர்ஜுன் அம்மா காலமானார்
நடிகர் அர்ஜுனின் அம்மா லட்சுமி தேவம்மா காலமானார். அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். அம்மாவின் மரணத்தால் மிகவும் மனம் வாடிப் போயுள்ளார் நடிகர் அர்ஜுன்.

தொடரும் சோகம்
இந்த ஆண்டு பிப்ரவரியில், அர்ஜுன் சர்ஜாவின் மாமனாரும், பழம்பெரும் நடிகருமான கலாதபஸ்வி ராஜேஷும் காலமானார். அந்த வலியில் இருந்து மீண்டு வரும் நிலையில் அர்ஜுன் சர்ஜாவின் தாயாரும் உயிரிழந்துள்ளார். முன்னதாக அர்ஜுனின் மருமகனான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது கன்னட திரையுலகை மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

பிரபலங்கள் இரங்கல்
தற்போது, அப்பல்லோ மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சர்ஜாவின் குடும்பத்தினரும் இறுதிச் சடங்குகளுக்குத் தயாராகியுள்ளனர். துருவா சர்ஜா மற்றும் அர்ஜுன் சர்ஜா குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் தங்கியுள்ளனர். இதற்கிடையில், கன்னட திரையுலகின் பல பிரபலங்கள் அர்ஜுன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து லட்சுமி தேவம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











