நடிகர் அருண் விஜய்க்கு வலது கையில் காயம்.. போட்டோவை ஷேர் செய்ததால் ரசிகர்கள் ஷாக்!

சென்னை: படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அருண் விஜய்க்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் நடிகர் அருண் விஜய்.

சீக்கிரம் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அசத்தும் அருண் விஜய்

அசத்தும் அருண் விஜய்

தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய நடிகர் அருண் விஜய்க்கு தொடர்ந்து வெற்றிகள் குவிந்து வருகின்றன. தடம், செக்கச் சிவந்த வானம், மாஃபியா என நடிப்பில் மாஸ் காட்டி வருகிறார்.

நல்ல கதை தேர்வு

நல்ல கதை தேர்வு

தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மிரட்டி வருகிறார் நடிகர் அருண் விஜய். அவர் நடிப்பில் பார்டர், சினம், அக்னி சிறகுகள், பாக்ஸர், இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஏவி33 என ஏகப்பட்ட படங்கள் ரெடியாகி வருகின்றன.

பார்டர் போஸ்டர்கள்

பார்டர் போஸ்டர்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பார்டர் படத்தின் அட்டகாசமான போஸ்டர்களையும் நடிகர் அருண் விஜய் வெளியிட்டு இருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி பாட்டேல் நடித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில்

ஹரி இயக்கத்தில்

சாமி, சிங்கம், ஐயா என பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த அருவா படம் டிராப் ஆனது. உடனடியாக அருண் விஜய்யை வைத்து ஏவி 33 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார் இயக்குநர் ஹரி.

ஜோடி யாரு

ஜோடி யாரு

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். ஏற்கனவே லைகா தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா படத்திலும் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

கையில் காயம்

கையில் காயம்

ஏவி 33 படத்தின் படப்பிடிப்பில் படு பிசியாக நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சின்ன விபத்தால் அவரது வலது கரத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சையை எடுத்து வரும் நடிகர் அருண் விஜய் அந்த போட்டோவை வெளியிட்டு போட்டிருக்கும் ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பெரிய சீன்

பெரிய சீன்

சீக்கிரமே இந்த காயம் குணமாகிவிடும் என எதிர்பார்க்கிறேன். நாளை மறுநாள் ஏவி 33 படத்திற்காக பெரிய ஸ்டன்ட் சீனை எடுக்க பிளான் பண்ணியிருக்கோம் என்றும் அருண் விஜய் ட்வீட் போட்டு இருக்கிறார். காயத்துடன் படுத்திருக்கும் அருண் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

அண்ணா நீ கெத்து நா.. உனக்கு இதெல்லாம் ஒண்ணுமில்லை.. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் என அருண் விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர். பத்திரமாக பார்த்து படம் பண்ணுங்க அருண் விஜய் சார் என்றும் சீக்கிரம் குணமடைந்து நல்லா படம் பண்ணனும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பிரகாஷ் ராஜுக்கும்

பிரகாஷ் ராஜுக்கும்

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் கையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலைமை உருவானது. ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறேன் என்று அவர் டெவில் இஸ் பேக் என ட்வீ ட் செய்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகள் படமாக்கினாலே இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கமுடியாதது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X