Aravind swamy: அடுத்த ஹீரோ இவர் தான்.. அப்பாவைவிட செம ஸ்மார்ட்டாக இருக்கும் அரவிந்த் சாமியின் மகன்!
சென்னை: சாக்லேட் பாய், அமுல் பேபி போல இருந்த அரவிந்த் சாமியை அன்றைய காலத்து இளம் பெண்களுக்கு பிடித்து போக, பல கல்லூரி பெண்களின் கனவு கண்ணாக இருந்தார். அஜித்தை போல தனது குடும்பத்தின் மீது சினிமா வெளிச்சம் படாமல் வைத்து இருக்கும் அரவிந்த் சாமியின் மகன் புகைப்படம் தற்போது இணைத்தில் டிரெணடாகி வருகிறது.
கோடீஸ்வரரின் மகனாக அரவிந்த் சாமி இருந்தாலும், அப்பா பணத்தை அளந்து கொடுத்ததால், பாக்கெட் மணிக்காக அரவிந்த் சாமி கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, மாடலிங் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் தான், இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய தளபதி படத்திற்காக வட இந்தியாவில் இருந்து வரும் ஒரு கலெக்டர் கதாபாத்திரத்திற்காக நடிகரை தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான் காபி விளம்பரத்தில் அரவிந்த்சாமியை பார்த்த மணிரத்னம். அவரை அழைத்து ரஜினிகாந்தின் தம்பியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். அது பின்னர் அரவிந்த் சாமி, ரோஜா, பம்பாய் என பல ஹிட் படங்களில் நடித்தார்.

நடிகர் அரவிந்த் சாமி: ரோஜா படத்தில் அரவிந்த் சாமியின் அழகை பார்த்த இளம் பெண்கள் எல்லாம் கட்டுனா அரவிந்த் சாமியைத்தான் கட்ட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு பெண்களின் கனவு நாயகனாக இருந்தார். ஆனால், ராமராஜன் நடிக்க வேண்டிய கிராமத்து கதை அம்சம் கொண்ட தாலாட்டு படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் அரவிந்த் சாமி பீல்ட் அவுட் ஆனார். கதைத்தேர்வில் கோட்டை விட்டதால் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். இந்த நேரத்தில் தான், விபத்தில் சிக்கி, முதுகுத்தண்டில் அடிபட்டதால், அவரால் நடக்க முடியாமல் போனது. இதற்காக அவர் பல மருந்துகளை எடுத்துக் கொண்டதால், குண்டாகி முடியெல்லாம் கொட்டி ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். இவர் குண்டாக இருந்த போட்டோ இணையத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அழகான நடிகர் : அதன்பின் தொடர்ந்து ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்து, கடுமையாக டயட் இருந்து தன்னை அப்படியே மாற்றிக் கொண்டு, தனிஒருவன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அரவிந்த் சாமிக்கு மீண்டும் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பல படத்தில் நடித்து வந்த அரவிந்த் சாமி, பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தில், அருள்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை நெகிழ வைத்தார்.
அப்பாவை போலவே ஸ்மார்ட்: மற்ற நடிகர்களைப்போல இல்லாமல், தனது குடும்பத்தின் மீது திரை வெளிச்சமே படாமல் தனது குடும்பத்தை வைத்து இருக்கிறார் அரவிந்த் சாமி. இந்த நிலையில், அரவிந்த் சாமி தனது மகன் ருத்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவைப் பார்த்த இணையவாசிகள் அப்பாவை போல மகனும் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











