»   »  மருத்துவமனையில் நடிகர் பாலாஜி

மருத்துவமனையில் நடிகர் பாலாஜி

Subscribe to Oneindia Tamil


சென்னை:

பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகரான கே.பாலாஜி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார்.

மேலும் ரஜினி, கமல் உள்பட பல முன்னனி நடிகர்களை வைத்து பல படங்களையும் தயாரித்துள்ளார். பல ஆண்டுகளாக படத் தயாரிப்பை கைவிட்டிருந்த பாலாஜி சமீபத்தில் அஜீத் நடித்த கிரீடம் படத்தை தயாரித்தார்.

சில நாட்களாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த பாலாஜி இன்று மயக்கமடைந்துவிட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாலாஜியின் உடல் நிலை தேறி அவரது மகன் சுரேஷ் கூறியுள்ளார்.

பாலாஜியின் மகளைத்தான் மலையாள நடிகர் மோகன் லால் திருமணம் முடித்துள்ளார்.

Read more about: balaji
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil