For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'யாராக இருந்தாலும் ஒருதடவைதான்!'

  By Sudha
  |
  Actress Yamuna
  விபச்சாரம் செய்து கைதாகியுள்ள கன்னட நடிகை யமுனா, எந்த ஒரு வாடிக்கையாளரையும், ஒரு தடவைக்கு மேல் 'அனுமதிக்க' மாட்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  சமீபத்தில் பெங்களூர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஐடி நிறுவன அதிபர் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டார் நடிகை யமுனா. இவர் கன்னடப் படங்களில் குணச்சித்திர நடிகையாக இப்போது நடித்து வருபவர்.

  இவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் யமனுவின் ஏஜென்ட்டான சுரக்ஷித்திடம் நடத்திய விசாரணையிலும் யமுனாவின் விபச்சாரத் தொழில் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், யமுனா ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறைதான் வாய்ப்பு கொடுப்பார். மறுபடியும் அவரிடம் போகவே மாட்டாராம். இதற்கு என்ன காரணம் என்றால், ஒரு வேளை போலீஸில் பிடிபட்டு விட்டால், விருப்பத்துடன்தான் உறவு வைத்துக் கொண்டோம் என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா, அதற்காகத்தான்.

  யமுனா மட்டுமில்லை, சுரக்ஷித் வசம் உள்ள மற்ற பெண்களையும், அப்படித்தான் பயன்படுத்தி வந்துள்ளார் சுரக்ஷித். யாரையும், ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு முறைக்கு மேல் அவர் அனுப்ப மாட்டாராம். மேலும், தனது வாடிக்கையாளர் பட்டியலை 'பக்கா'வாக அப்டேட் செய்து வைத்திருப்பாராம் சுரக்ஷித். எனவே தெரியாமல் கூட எந்த வாடிக்கையாளரும், ஒரு பெண்ணை இரண்டாவது முறையாக இன்பம் அனுபவிக்க முடியாதாம்.

  பெங்களூர் மட்டுமல்லாமல், மும்பை, டெல்லியிலும் கூட சுரக்ஷித்துக்கு ஏராளமான விபச்சாரப் பெண்கள் உள்ளனர். தேவைப்படும்போது அவர்களை அழைத்துக் கொள்வாராம்.

  இது மிகவும் ரிஸ்க்கான தொழில், எப்போது வேண்டுமானாலும் பிடிபடலாம் என்று தெரிந்திருந்ததால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருப்பாராம். எப்போதும் உஷாராகவும் இருப்பாராம். சாதாரண ஹோட்டல்களில் ரூம் போட மாட்டார். அவருடைய பெயரில் 3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே ரூம் போடுவார். சில மணி நேரங்களில் வேலையை முடித்து விட்டு இடத்தைக் காலி செய்து விடுவதால் பிரச்சினை வராதாம்.

  ஒரு வாடிக்கையாளருக்கு ஒருமுறைதான் என்ற வித்தியாசமான அணுகுமுறைய யமுனாவுக்கு கற்றுக் கொடுத்ததே சுரக்ஷித்தானாம். எவ்வளவுதான் கொட்டிக் கொடுக்க முன்வந்தாலும், அது யாராக இருந்தாலும் 2வது முறை அவருக்கு 'டேட்' கொடுக்க மாட்டாராம் யமுனா.

  கடந்த வியாழக்கிழமையன்று நடந்த ரெய்டின்போது சுரக்ஷித்துடன் சேர்த்து 8 பெண்களையும் போலீஸார் பிடித்தனர். அவர்களுடன், நந்தகுமார் என்ற வாடிக்கையாளரும் பிடிபட்டார். இவர்களிடமிருந்து 2 கார்கள், நந்தகுமாரிடமிருந்து ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை யமுனாவிடம் கொடுக்க வைத்திருந்ததாக தெரிகிறது.

  கைது செய்யப்பட்டவர்களில் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். ஏஜென்ட் சுரக்ஷித் மட்டும் 28ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  யமுனா பிடிபட்ட விதம் குறித்து மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் லட்சுமண் கூறுகையில், நாங்கள் கையும் களவுமாக யமுனாவைப் பிடித்தோம். அப்போது அவர் எங்களிடம் ஸாரி என்று கூறினார். இதன் மூலம் தெரிந்தே அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதைப் புரிந்து கொண்டோம் என்றார்.

  English summary
  Actor Yamuna who was caught by the Bangalore police for her alleged involvement in a sex racket at a five-star hotel never offered her services for a second time to the same client, a police source has said. "Yamuna would 'date' her client only once so that if she was ever caught, she could claim consensual sex," added the source. Not only Yamuna, Surakshit, her agent, never allowed clients a second time even with his other girls. Surakshit regularly 'updated' his client list, and even had contacts with call girls from other cities such as Mumbai and Delhi. Lakshman, ACP, CCB said, "At the time of raid, Yamuna said 'sorry', indicating that she was in this business knowingly. We caught her red-handed."

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more