வீட்டில் வேலைசெய்யும் பணியாளரின் இல்லத்திருமணத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்..சந்தோஷத்தில் ஜோடி!

சென்னை : நடிகர் விக்ரம் வீட்டில் பணியாற்றி வரும் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக மிகவும் இயல்பாக நடிக்கக்கூடியவர் விக்ரம். இதனால் இவருக்கு என்று தனிரசிகர் கூட்டமே உண்டு.

சேது படத்திற்கு படத்தில் மிரட்டிய விக்ரமை ரசிகர்கள் சீயான் விக்ரம் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

விக்ரம்

விக்ரம்

தன்னுடைய ரசிகர்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் விக்ரம். வீட்டிலோ, அலுவலகத்திலோ பணியாற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த குடும்ப உறவாகவே கருதி வருகிறார். ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நல்ல கெட்டது என எதுவாக இருந்தாலும், முன்னின்று அதனை நடத்திவைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் விக்ரம்.

பணியாளர் இல்லத்திருமணம்

பணியாளர் இல்லத்திருமணம்

இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். இவருடைய மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். மேரின் மகள் தீபக்கிற்கு வர்ஷினி என்பவருடன் பெரியோர்களால் நிச்சயதார்த்தம் செய்து முடிக்கப்பட்டது.

வாழ்த்திய விக்ரம்

வாழ்த்திய விக்ரம்

இதைடுத்து இன்று, திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் தீபக் மற்றும் வர்ஷினியின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நடிகர் விக்ரம், சர்ப்ரைஸ்ஸாக கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களை வாழ்த்தினர்.

கோப்ரா

கோப்ரா

நடிகர் விக்ரம் சமீபத்தில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை வாரிக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா வசூலில் சொதப்பியது. இதையடுத்து விக்ரம் பா.ரஞ்சித்துடன் புதிய படம் ஒன்றில் இணைகிறார். இதற்கான படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X