Don't Miss!
- News
மத்திய அரசின் வெப்சைட்டில் எழுத்துப் பிழை.. என்னது ‘தமிழ் நாயுடு’வா? திமுக ஐடி விங் கொதிப்பு!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
மூன்றாவது பாகத்திற்கும் ரெடியாகும் புஷ்பா டீம்.. பகத் சொன்ன அப்டேட்டை பாக்கலாமா!
கொச்சி : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது புஷ்பா படம்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியும் இணையவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெறித்தனமான ஒர்க் அவுட்...ஸ்லிம்மான ஜாக்குலினை பார்த்து ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் இணைந்து நடித்து கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது புஷ்பா படம். சிவப்பு சந்தன மரக்கட்டைகளை கடத்தும் நபராகவும் தொடர்ந்து கேங்ஸ்டராகவும் இந்தப் படத்தில் புஷ்பராஜ் என்ற கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.

மிரட்டிய பகத் பாசில்
படத்தில் அவருக்கு இணையாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார் பகத் பாசில். இந்தக் கேரக்டர் பாதிப்படத்தில் இணைந்தாலும் மிகவும் சிறப்பான பெயரை பகத்திற்கு பெற்றுத்தந்தது. அவரும் நடிப்பில் மிரட்டியிருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது.

2வது பாகம் சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துக் கொண்டிருந்தபோது படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. அதையொட்டி தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் அடுத்தமாதம் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போனது.

பிரம்மாண்ட காட்சிகளுக்கு திட்டம்
படத்தில் கேஜிஎப் படம் போல பிரம்மாண்டமான காட்சிகளை அமைக்கும் வகையில் இயக்குநர் சுகுமார், படத்தின் திரைக்கதையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

புஷ்பா 3வது பாகம்
இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது பாகமும் வெளியாகவுள்ளதாக நடிகர் பகத் பாசில் தெரிவித்துள்ளார். அவர் தனது மலையன்குஞ்சு படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் இதனை தெரிவித்தார். முதலில் தனக்கு சுகுமார் கதை சொன்னபோது, இரண்டாவது பாகத்தை எடுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3வது பாகத்தின் வேலைகள்
ஆனால் படத்தின் இடையில் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் உருவானபோது, இரண்டாவது பாகம் குறித்து அவர் கூறியதாகவும் பகத் தெரிவித்துள்ளார். இதனிடையே தற்போது அவர் படத்தின் மூன்றாவது பாகத்திற்கான வேலைகளையும் துவக்கியுள்ளதாகவும் தன்னை தயாராகும்படி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
அதிகமான விஷயம் இருக்கு
அந்த அளவிற்கு இந்தக் கதையில் அவரிடம் அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் அதை தொடர்ந்து டெவலப் செய்யும் வேலையில் சுகுமார் ஈடுபட்டுள்ளதாகவும் பகத் தெரிவித்துள்ளார். முதல் பாகம் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில், அடுத்த பாகத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ரசிகர்கள் உற்சாகம்
இந்நிலையில் மூன்றாவது பாகம் குறித்த பகத்தின் அப்டேட் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார். படத்தின் வெற்றிக்கு இதுவும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் 2வது பாகத்தில் யார் இந்த நடனத்தை ஆடுவார்கள் என்றும் அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.