»   »  ஆன்லைனில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.. சென்னை கமிஷனரிடம் ஜி.வி.பிரகாஷ் புகார்

ஆன்லைனில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.. சென்னை கமிஷனரிடம் ஜி.வி.பிரகாஷ் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலத்தில் அப்பட நாயகன் ஜி.வி.பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

Actor G.V.Prakash gives police complaint

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள நான்காவது படம், 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ்- ஆனந்தி இணைந்து நடிக்கும் படம். 'டார்லிங்' பட இயக்குநர் சாம் ஆண்டன் - ஜி.வி. கூட்டணியில் உருவான இப்படம், கடந்த வெள்ளியன்று ரிலீசானது.


Actor G.V.Prakash gives police complaint

ரஜினியின் 'பாட்ஷா' பட டயலாக் டைட்டிலாக கொண்டதால் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.


இந்நிலையில், இப்படத்தை சில இணையதளங்கள் முறைகேடாக இணையத்தில் ஒளிபரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அப்பட நாயகன் ஜி.வி.பிரகாஷ், இன்று சென்னை கமிஷனர் அலுவலகம் சென்று புகார் அளித்துள்ளார்.

English summary
Actor G.V.Prakash, on Monday lodged a formal complaint with Chennai City police seeking action on Enakku innoru peru irukku film issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil