கமலுடனான சந்திப்பில் என்ன நடந்தது? சோலோவாக எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து மனம் திறந்த வேம்புலி!

சென்னை: நடிகர் கமல்ஹாசனுடனான சந்திப்பு போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஜான் கோக்கென்.

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஜான் கோக்கென். தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்

பாகுபலி தி பிகினிங், கேஜிஎஃப் சாப்டர் 1 போன்ற பெரிய புராஜெக்ட் படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் ஜான் கோக்கென்.

மீரா வாசுதேவனுடன் முதல் திருமணம்

மீரா வாசுதேவனுடன் முதல் திருமணம்

இதேபோல் தமிழில் அஜித்தின் வீரம் படத்தில் நடித்துள்ளார் ஜான் கோக்கென். மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ஜான் கோக்கென், 2012 ஆம் ஆண்டு நடிகை மீரா வாசுதேவனை திருமணம் செய்தார்.

மீரா வாசுதேவன் - ஜான் கோக்கென் விவாகரத்து

மீரா வாசுதேவன் - ஜான் கோக்கென் விவாகரத்து

ஏற்கனவே முதல் கணவரை விவாகரத்து செய்த மீரா வாசுதேவன் இரண்டாவதாகதான் ஜான் கோக்கெனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண உறவும் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாட்டால் 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

பூஜா ராமச்சந்திரனுடன் 2வது திருமணம்

பூஜா ராமச்சந்திரனுடன் 2வது திருமணம்

அதன்பிறகு 2019ஆம் ஆண்டு நடிகை பூஜா ராமச்சந்திரனை இரண்டாவது திருமணம் செய்தார் ஜான் கோக்கென். பூஜாவுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். சிறிய பட்ஜெட் படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என பல படங்களில் நடித்திருந்த போதும் ஜான் கோக்கென் பிரபலமாகவில்லை.

தன்னுடன் மோத ஆளே இல்லை

தன்னுடன் மோத ஆளே இல்லை

ஆனால் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து பெரும் பிரபலமாகிவிட்டார் ஜான் கோக்கென். சார்பட்டா பரம்பரை படத்தில் தன்னுடன் மோத ஆளே இல்லை என்ற பாணியில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜான் கோக்கென்.

அடித்து துவம்சம் செய்யும் போது

அடித்து துவம்சம் செய்யும் போது

மற்ற போட்டியாளர்களை அடித்து துவம்சம் செய்யும் போதும், ஆர்யாவிடம் அடி வாங்கி தோற்று போகும் போதும் வேம்புலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் ஜான் கோக்கென். சில காட்சிகளில் ஜான் கோக்கெனை பார்த்து பார்வையாளர்களே மிரளும் படியாக இருந்தது அவரது உடல் மொழியும் நடிப்பும்.

கமல் ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு

கமல் ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு

இதனால் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வேம்புலியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

போட்டோவை ஷேர் செய்த ஜான் கோக்கென்

போட்டோவை ஷேர் செய்த ஜான் கோக்கென்

அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜான் கோக்கென் நடிகர் கமல்ஹாசனுடன் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் படக்குழுவினருடனும் தனது மனைவியுடனும் மற்றும் சோலோவாக கமலுடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

கமல் சார் படத்தை பற்றி பேசியது

கமல் சார் படத்தை பற்றி பேசியது

படக்குழுவினருடன் கமலை சந்தித்த போட்டோவை ஷேர் செய்துள்ள ஜான் கோக்கென், சார்பட்டா பரம்பரை டீம் கமல் சாரை சந்தித்ததும், கமல் சார் பாராட்டியதும், படத்தை பற்றி அவர் பேசியதும் எங்களுக்கு ஒரு அற்புதமான தருணம் என பதிவிட்டுள்ளார்.

தி மாஸ்டர் ஆஃப் மாறுவேடம்

தி மாஸ்டர் ஆஃப் மாறுவேடம்

இதேபோல் கமலுடன் தான் மட்டும் தனியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ஜான் கோக்கென், கமல் ஹாசன் சாருடன் ஒரு தனி படம்.. ஒரு நடிகராக எனது தோற்றத்துடன் நடிப்பதற்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக தோற்றமளிப்பதற்கும் எனது உத்வேகம் கமல் சார் - தி மாஸ்டர் ஆஃப் மாறுவேடத்திற்கு நன்றி. நான் உங்களால் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறேன் சார் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X