அரசியல், நடிப்பு என பிசியாக இருந்தாலும் மகள் சுஜாவுக்காக மறக்காமல் ‘இதை’ச் செய்த கமல்!

சுஜா வருணி சிவக்குமார் தம்பதிக்கு நடிகர் கமல் மதிய விருந்து கொடுத்தார்.

Recommended Video

மகள் சுஜாவுக்காக மறக்காமல் ‘இதை’ச் செய்த கமல்!- வீடியோ

சென்னை: சமீபத்தில் திருமணமான பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணிக்கு நடிகர் கமல் விருந்து கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அடிக்கடி சிறு வயதில் தங்களை நிராதரவாக விட்டுச் சென்ற தந்தை குறித்து உருக்கமாக சுஜா பேசியுள்ளார்.

அப்படி ஒரு முறை சுஜா பேசிய போது, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், "கவலைப்படாதே உனக்கு அப்பாவாக நான் இருக்கிறேன்" என ஆறுதல் கூறினார்.

சுஜா திருமணம்:

சுஜா திருமணம்:

இந்நிலையில் சமீபத்தில் தனது காதலர் சிவக்குமாரை சுஜா மணந்தார். இத்திருமணத்தில் கமல் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் நடிகை ஸ்ரீப்ரியா தனது கணவருடன் சென்று திருமண சடங்குகளில் கலந்துகொண்டார்.

இது தான் காரணம்:

இது தான் காரணம்:

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணி மற்று கட்சி பணி ஆகியவற்றில் கமல் பிஸியாக இருந்தார். இதனாலேயே அவரால் சுஜா திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. கமலின் இந்த திடீர் விருந்தால், சுஜா - சிவக்குமார் தம்பதி மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

கமல் தந்த விருந்து:

கமல் தந்த விருந்து:

இந்த சூழலில் புதுமணத் தம்பதியரை அழைத்து மதிய உணவு கொடுத்து, விருந்து வைத்து அசத்தியிருக்கிறார் கமல். இந்த விருந்தில் நடிகை ஸ்ரீப்ரியாவும் கலந்துகொண்டார். இது தொடர்பாக புகைப்படங்களை சுஜா வருணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுஜா மகிழ்ச்சி:

சுஜா மகிழ்ச்சி:

கூடவே "சந்தோஷமான தருணம் இது. கமல் எங்களை விருந்துக்காக அழைத்ததற்கு நானும் எனது அத்தான் சிவக்குமாரும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எனது மாமியார் ஸ்ரீப்ரியாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அப்பா கமல் விரைவில் வீட்டிற்கு வரவிருக்கிறார். என் கண்களில் ஆனந்த கண்ணீர்", என அவர் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X