Don't Miss!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
நடிப்பு ராட்சஸி.. தனது முன்னாள் கதாநாயகி கோவை சரளாவை பாராட்டிய கமல்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது விக்ரம் படம்.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 100 சதவிகித படமாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். கமலும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
விக்ரம் படத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் கூறி வருகின்றனர்.
அசர்பைசான் நாடாளுமன்றத்தில் கார்த்தியோட சர்தார் சூட்டிங்.. வில்லன் போர்ஷனுக்கு இவ்வளவு கோடி செலவா?

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள விக்ரம் படம் தற்போது 300 கோடி ரூபாய்களை தாண்டி வசூல்வேட்டை நடத்தி வருகிறது.

ரசிகர்கள் பாராட்டு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படம் சிறப்பான த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ள நிலையில், திரையரங்குகளில் ரிப்பீட்டட் ஆடியன்சை பார்க்க முடிகிறது. படம் இரண்டு வாரயிறுதிகளை கடந்துள்ள நிலையில் தொடர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூல்மழை பொழிந்து வருகிறது.

பிரபலங்கள் வாழ்த்து
4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது. நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஐதராபாத்தில் நடிகர் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜிற்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கமலை சந்தித்த செம்பி டீம்
இந்நிலையில் தற்போது செம்பி படக்குழுவினர் நடிகர் கமலை நேரில் சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனின் முன்னாள் கதாநாயகியான கோவை சரளா நடிப்பில் செம்பி படத்தை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். படத்தில் அஸ்வின் நாயகனாக நடித்துள்ளார்.

செம்பி ட்ரெயிலரை பார்த்த கமல்
சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் கமலை சந்தித்த படக்குழுவினர் செம்பி படத்தின் ட்ரெயிலரை கமல்ஹாசனுக்கு போட்டுக் காட்டியுள்ளனர்.

கோவை சரளாவிற்கு பாராட்டு
இந்த ட்ரெயிலரை பார்த்து வெகுவாக இம்ப்ரஸ் ஆகிய நடிகர் கமல்ஹாசன், தனது முன்னாள் நாயகி கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று பாராட்டியுள்ளார். இதனிடையே, ட்ரெயிலரை பார்த்து கமல் பாராட்டியது தங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

வித்தியாசமான கேரக்டரில் கோவை சரளா
இந்த சந்திப்பின்போது செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் பிரபு சாலமன், நடிகை கோவை சரளா மற்றும் அஸ்வின் உடனிருந்தனர். இந்தப் படத்தில் அஸ்வினின் நடிப்பு மிகவும் மெச்சூர்டாக காணப்படுகிறது. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் கோவை சரளா நடித்துள்ளார்.

சிறப்பான கேரக்டர்
நடிகை கோவை சரளா காமெடி நடிகையாக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கினார். தொடர்ந்து பல காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது அம்மா உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் செம்பி இவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

கமலுடன் ஜோடி
முன்னதாக கமல்ஹாசனின் சதிலீலாவதி படத்தில் கோவை சரளா கமலுடன் ஜோடியாக நடித்துள்ளார். அப்போது இந்த விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு காமெடி நடிகையை தன்னுடைய ஜோடியாக்கும் கமலின் துணிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த ஜோடி மிகவும் கலகலப்பாக படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.