Don't Miss!
- News
"சின்ன கேப்சூல் மாயம்.." அலறிய ஆஸ்திரேலியா.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்.. நிம்மதி! என்ன நடந்தது
- Technology
அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா? வாங்க பார்ப்போம்.!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரெட் ஜெயன்ட் தலைவர், என் அன்புத் தம்பி…: அடுக்கு மொழியில் உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!
சென்னை: நடிகரும் சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் உதயநிதிக்கு பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனும் உதயநிதிக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'’வாரிசு’’
விவகாரத்தில்
நான்
தலையிட
முடியாது..நைசாக
நழுவிய
உதயநிதி
ஸ்டாலின்!

உதயநிதியின் 45வது பிறந்தநாள்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்த உதயநிதி, அதன்பின்னர் அவரும் நடிகராக அவதாரம் எடுத்தார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் மூலம் ஹீரோவான உதயநிதி தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ என தரமான படங்களில் நடித்து கெத்து காட்டினார். இதனிடையே அரசியலிலும் அடியெடுத்து வைத்த உதயநிதி, கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் தேர்வானார். இந்நிலையில், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் உதயநிதிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

என் அன்புத் தம்பிக்கு வாழ்த்து
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனும் உதயநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல், "சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். திமுக - மநீம என உதயநிதியும் கமல்ஹாசனும் இருவேறு அரசியல் பாதைகளில் பயணித்தாலும் திரையுலகில் இவர்களின் கூட்டணி மாஸ் காட்டி வருகிறது.

திடீர் நட்பு, விக்ரம் வெற்றி
விக்ரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை கமலிடம் கேட்டுள்ளார் உதயநிதி. அதற்கு கமல்ஹாசனோ அரசியல் வேறு, சினிமா வேறு என்ற புரிதல் இருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என விக்ரம் ரைட்ஸை உதயநிதிக்கு கொடுத்துவிட்டார். ரெட் ஜெயன்ட் கைகளில் போனதும், விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் தாறுமாறாக இருந்தது. அதேபோல், படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்க விக்ரம், உதயநிதி இடையேயான நட்பு அடுத்தக் கட்டத்துக்கு சென்றது.

ராஜ்கமலுக்காக கைகொடுத்த உதயநிதி
விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது. அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் கமல் கமிட் ஆகியிருந்த இந்தியன் 2 பட்ஜெட் பிரச்சினை காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. விக்ரம் வெற்றிக்குப் பின்னர் லைகாவுடன் சேர்ந்து இந்தியன் 2 தயாரிப்பில் கை கோர்த்தார் உதயநிதி. அதோடு இப்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தையும் இணைந்து தயாரிக்கிறார் உதயநிதி. அதுமட்டும் இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் உதயநிதி கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கு உதயநிதி தேவை
சமீபகாலமாக கமல்ஹாசன் பங்கேற்கும் திரைப்பட நிகழ்ச்சிகளில் உதயநிதி குறித்து கமல்ஹாசன் பேசுவதை கண்டிப்பாக பார்க்க முடிகிறது. மேலும், முழுநேரமும் அரசியலில் பயணிக்க முடிவெடுத்துள்ள உதயநிதி, விரைவில் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், அது கூடாது என அன்பாக கண்டிப்பு தெரிவித்த கமல், "உதயநிதி தொடர்ந்து நடிக்க வேண்டும், இத பத்தி நான் உங்க அப்பா ஸ்டாலின் கிட்ட பேசிருக்கேன்" என உரிமையோடு பேசியது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது.

விரைவில் உதயநிதியின் மாமன்னன்
உதயநிதி அரசியலுக்கு சென்றாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடக் கூடாது என கமல் சொன்னதை போலவே, இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் கூறியிருந்தனர், உதயநிதியும் அந்த எண்ணத்தை கைவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் வெளியான கலகத் தலைவன் உதயநிதிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதேபோல், அடுத்து வரவிருக்கும் மாமன்னன் திரைப்படமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் நடிக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.