twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூலில் கபாலியை பீட் செய்த விக்ரம்.. ஆனாலும் 2.ஓ தான் முன்னாடி இருக்கு.. எங்க தெரியுமா!

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் தொடர்ந்து வசூல்வேட்டை நடத்தி வருகிறது.

    Recommended Video

    Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

    வெளிநாடுகளில் படம் சிறப்பான விமர்சனங்களையும், வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

    ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய படமாக முன்னணியில் காணப்படுகிறது விக்ரம்.

    பாகுபலி-2 சாதனை முறியடிப்பு..5 வருடங்களில் இல்லாத சாதனை.. தொடர் வெற்றியில் விக்ரம்.. கமல் உற்சாகம் பாகுபலி-2 சாதனை முறியடிப்பு..5 வருடங்களில் இல்லாத சாதனை.. தொடர் வெற்றியில் விக்ரம்.. கமல் உற்சாகம்

     கமலின் விக்ரம் படம்

    கமலின் விக்ரம் படம்

    நடிகர் கமல்ஹாசனின் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள விக்ரம் படம் தற்போது அவருக்கு மிகச்சிறப்பான ரீ என்ட்ரியை கொடுத்துள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக மாறியுள்ளது விக்ரம். படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

    சிறப்பான 3 வாரங்கள்

    சிறப்பான 3 வாரங்கள்

    இந்தப் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர். 3 வாரங்களை படம் கடந்துள்ள நிலையில், திரையரங்குகளில் ரிப்பீட்டட் ஆடியன்சை அதிகமாக பார்க்க முடிகிறது. இளைஞர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

     தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    படத்தின் வசூல் வார நாட்களிலும் மிகச்சிறப்பாக காணப்படுகிறது. தனிக்காட்டு ராஜாவாக போட்டியின்றி வசூல்வேட்டை நடத்தி வருகிறது விக்ரம். ஆனால் வரும் வாரங்களில் மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், விக்ரம் படத்தின் வசூல் குறையலாம் என்று கூறப்படுகிறது.

    வெளிநாடுகளில் கபாலியை முந்திய விக்ரம்

    வெளிநாடுகளில் கபாலியை முந்திய விக்ரம்

    சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் தற்போது 18 நாட்களை கடந்துள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே படம் 115 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்து வருகிறது. முன்னதாக வெளிநாடுகளில் அதிகமாக வசூலித்த கபாலி படத்தின் வசூலை தற்போது விக்ரம் முறியடித்துள்ளது.

    முதலிடத்தில் ரஜினியின் 2.ஓ

    முதலிடத்தில் ரஜினியின் 2.ஓ

    ஆனாலும் இந்த வரிசையில் ரஜினியின் 2.ஓ படமே 150 கோடி ரூபாய் கலெக்ஷனை வெளிநாடுகளில் ஈட்டி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதனிடையே சர்வதேச அளவில் கடந்த 3 வாரங்களில் விக்ரம் படம் 365 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. இந்த வசூல்வேட்டை தொடரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் வரவேற்பு

    கேரளாவில் வரவேற்பு

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களிலும் படம் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதுடன் வசூலையும் பெற்றுள்ளது. அங்கு வெளியாகும் முன்னணி ஹீரோக்களின் படங்களையும் பின்னுக்குத் தள்ளி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது விக்ரம் படம்.

    மற்ற மாநிலங்களில் வசூல்

    மற்ற மாநிலங்களில் வசூல்

    இதற்கு காரணம் படத்தில் இடம்பெற்ற பகத் பாசில். முதல் பாதியில் படத்தில் அவரது ஆதிக்கம் அதிகமாக காணப்படும் சூழலில், விக்ரம் படத்தை மலையாள படமாகவே பார்த்து வருகின்றனர் கேரள ரசிகர்கள். இதேபோல ஆந்திரா, கர்நாடகாவிலும் படம் கமல், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களுக்காக சிறப்பாக ஓடி வருகிறது.

    ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

    ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

    இதனிடையே படம் வரும் ஜூலை 7ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படத்தின் வசூல் இதேபோல காணப்பட்டால் இந்த தேதியில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. படம் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை என பல வகைகளிலும் வசூலித்துக் கொடுத்துள்ளது.

    English summary
    Kamal's Vikram movie beats Kabali in overseas collections
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X