Don't Miss!
- News
எல்லாம் ரெடி.. தடையே போட்டாலும் கவலை இல்லை.. பொதுக்குழுவுக்கு பக்காவா ஷெட்யூல் போட்ட எடப்பாடி!
- Finance
ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
- Travel
மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
45வது பிறந்தநாள்.. பழனி மலை முருகனை குடும்பத்துடன் தரிசித்த கார்த்தி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
சென்னை: நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகருமான கார்த்தி இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் பழனி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.
செம்பருத்தி
“விடாது
கருப்பு“..
சீரியலை
சீக்கிரம்
முடிங்க..
கடுப்பான
ரசிகர்கள்
!

3 மாதத்துக்கு புக்கிங்
ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை அடுத்தடுத்து மூன்று மாதங்களுக்கு புதிய படங்களை வெளியிட இப்போதே தேதிகளை புக் செய்து விட்டார் நடிகர் கார்த்தி. ஆகஸ்ட் 31ம் தேதி விருமன், செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் மற்றும் அக்டோபர் 21ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சர்தார் என தொடர்ச்சியாக படங்களை கொடுத்து தூள் கிளப்ப போகிறார்.

கிளாஷ் பயமே இல்லை
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்துடன் தைரியமாக கைதி படத்தை இறக்கி சூப்பர் ஹிட் வெற்றியையும் விமர்சகர்கள் மற்றும் மக்களின் பாராட்டுக்களையும் அள்ளிய கார்த்தி, இந்த ஆண்டு அஜித்தின் ஏகே 61 படத்துடன் தைரியமாக சர்தார் படத்துடன் தயாராக நிற்கிறார். திட்டமிட்டபடி ஏகே 61 ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு வருமா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

45வது பிறந்தநாள்
நடிகர் சிவகுமாருக்கு 1977ம் தேதி மே 25ம் தேதி மகனாக பிறந்தவர் நடிகர் கார்த்தி. கோலிவுட்டின் முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்தியும் தொடர்ந்து சூப்பர் ஹிட் கதைகளை தேர்வு செய்து நடித்து அண்ணனுக்கு அடுத்த இடத்தை பிடித்து விட்டார். கார்த்தியின் நடிப்பில் வெளியான பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து கெத்து காட்டி வருகிறார்.

பழனி கோயிலில் தரிசனம்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலைக்கு தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் கார்த்தி. அப்பா சிவகுமார் மற்றும் கார்த்தி பழனி மலை கோயிலுக்கு சென்ற காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ரசிகர்கள் வாழ்த்து
45வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் கார்த்தி இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். மூன்று படங்களுமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாக உள்ள நிலையில், நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் அடுத்த இடத்திற்கு செல்ல இந்த ஆண்டு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.