»   »  ‘பொதுநலன் கருதி’ ஹீரோவானார் காமெடி நடிகர் கருணாகரன்

‘பொதுநலன் கருதி’ ஹீரோவானார் காமெடி நடிகர் கருணாகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல காமெடி நடிகர் கருணாகரன் பொதுநலன் கருதி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் இசையமைப்பாளர்கள், காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறி வருவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நடிகர் வடிவேலு, சந்தானத்தைத் தொடர்ந்து கருணாகரனும் ஹீரோவானார்.

தற்போது அவர் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை அறிமுக இயக்குநர் ஜியான் இயக்கிறார். அப்படத்திற்கு பொதுநலன் கருதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உப்புக்கருவாடு...

உப்புக்கருவாடு...

தொடர்ந்து படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் கருணாகரன், ஏற்கனவே உப்புக் கருவாடு படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி என்ற படத்திலும் அவர் நாயகனாக நடித்து வருகிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன்...

நான் கடவுள் ராஜேந்திரன்...

இறப்பிற்குப் பிறகு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கூறும் படமான இதை சவாரிப் பட இயக்குநர் குகன் இயக்கியுள்ளார். ஆனந்தராஜ் வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பொதுநலன் கருதி...

பொதுநலன் கருதி...

இந்நிலையில் தற்போது பொதுநலன் கருதி எனும் புதிய படத்திலும் நாயகனாக நடிக்கிறார் கருணாகரன். அவருடன் ஆதித் மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களிலும் அனு சித்தாரா, லீஷா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

சுயநலம்...

சுயநலம்...

இந்த படம் குறித்து இயக்குனர் ஜியான் கூறுகையில், "மூன்று கிராமத்து இளைஞர்கள் சென்னைக்கு வந்து சந்திக்கும் பிரச்சனை தான் கதையின் மையப்புள்ளி. தற்கால உலகில் பொதுநல சேவை செய்தாலும் அதிலும் ஒரு சுயநலம் இருக்கின்றது என்பதை என்னுடைய ஸ்டைலில் சொல்ல விரும்புகிறேன். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் சென்னையில்தான் நடைபெறவுள்ளது" என்றார்.

அஜித் படத்தில் காமெடி...

அஜித் படத்தில் காமெடி...

தொடர்ந்து நாயகனாக வாய்ப்புகள் வரும்போதும், காமெடி கதாபாத்திரங்களையும் கருணாகரன் ஒதுக்குவதில்லை. தற்போது அவர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் காமெடியனாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Karunakaran has signed on his next film titled Podhu Nalan Karudhi, which is being directed by debutant Zion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil