»   »  அஜீத் விவகாரம்... கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த கருணாஸ்

அஜீத் விவகாரம்... கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த கருணாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் பெயரில் போலியான கணக்கை பயன்படுத்தி ட்விட்டரில் அஜித்குமாரை விஷமிகள் விமர்சித்து இருக்கிறார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

நடிகரும், நடிகர் சங்கத் துணைத் தலைவருமான கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜீத்தை தவறாகப் பேசினார் என்று பரவிய செய்தியால் திரையுலகில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த கருணாஸ் உடனே அதனை மறுத்து அறிக்கை விடுத்தார். தொடர்ந்து நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற
கருணாஸ் தனிப்பட்ட முறையில் இந்த செயலுக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருக்கிறார்.

கருணாஸ்

கருணாஸ்

அஜித்தைப் பற்றி கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான ட்விட்டினை பதிவிட்டதாகவும், இதனால் அஜீத் ரசிகர்கள் கருணாஸிற்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த விஷயத்தை நடிகர் கருணாஸ் மறுத்து அறிக்கை விடுத்தார். மேலும் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற கருணாஸ் தனிப்பட்ட முறையில் இந்த செயலுக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருக்கிறார். புகார் அளித்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கருணாஸ் பின்வருமாறு கூறினார்.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

எனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கை யாரோ விஷமிகள் தொடங்கி, அஜித்குமாரை பற்றி விமர்சித்திருக்கிறார்கள். எனக்கும், இதற்கும் எந்தவித சம்பந்தம் இல்லை. டைரக்டர் வெங்கட்பிரபு ஆலோசனைப்படி கடந்த ஜனவரி மாதம் நான் டுவிட்டர் கணக்கில் சேர்ந்தேன்.ஆனால், அதில் நான் எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை. ஆனால் யாரோ விஷமிகள் என் பெயரில் போலி கணக்கை தொடங்கி, தவறாக பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாரிடம் மனு கொடுத்துள்ளேன்.

அஜித்குமாருக்கு தெரியும்

அஜித்குமாருக்கு தெரியும்

நானும், அஜித்குமாரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். என்னைப்பற்றி நடிகர் அஜித்குமாருக்கு நன்றாக தெரியும். அவர் 200 சதவீதம் இதை நம்பமாட்டார். நான் மெரினா கடற்கரையில் தூங்கி இரவு பகலாக உழைத்து கஷ்டப்பட்டுதான் இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளேன். ஆனால் ஒரே இரவில் எனது புகழை சீர்குலைக்க நினைப்பது வருத்தமளிக்கிறது.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

நடிகர் சங்கத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை அவர் நடிகர் சங்கத்தில் வாக்குப் பதிவு செய்ய வராதது அவரது தனிப்பட்ட விஷயம். அந்த நேரத்தில் சூழ்நிலை காரணமாக நிறைய நடிகர்கள் வரவில்லை அதற்காக எனக்கு அவர் மீது எந்த வருத்தமும் இல்லை. நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் அவருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் இந்த புகாரை நான் அளிக்கவில்லை, நான் ஒரு நடிகர் என்ற முறையிலேயே இதனை கொடுத்திருக்கிறேன். இவ்வாறு கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக

முன்னதாக

இதற்கு முன்னர் நடிகர் உதயநிதி அஜீத்தை தவறாகப் பேசினார் என்று சலசலப்பு எழுந்தது, பின்னர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார். சில நாட்களுக்கு முன்னால் நடிகர் அஜித்துக்கு மாரடைப்பு என்று வதந்தி பரவி, பின்னர் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actor Karunas Refuse the news that he has insulted Ajith through twitter. He says "I did not say Anything Wrong about Ajith". Now He filed a complaint with the Chennai city police commissioner’s office Yesterday.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more