ரொம்ப லேட் தலைவரே.. தடை பண்றதா வேற பேசிக்கறாங்க.. டிவிட்டரில் இணைந்த நடிகர்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்!

சென்னை: டிவிட்டரில் இணைந்த பிரபல நடிகரை வரவேற்றுள்ள நெட்டிசன்கள் ரொம்ப லேட் என ரியாக்ட் செய்துள்ளனர்.

Recommended Video

என்னோட பசங்க கல்யாணத்துக்கு SULTHAN தான் காரணம் |Actor Mayilsamy Speech |Filmibeat Tamil

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மயில்சாமி.

1985 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில் சாமி.

முக்கிய கதாப்பாத்திரம்

முக்கிய கதாப்பாத்திரம்

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

முறுங்கைக்காய் சிப்ஸ்

முறுங்கைக்காய் சிப்ஸ்

கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் மயில்சாமி. தற்போது முறுங்கைக்காய் சிப்ஸ் மற்றும் இடியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக உள்ளார் நடிகர் மயில்சாமி. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.

சுயேட்சையாக போட்டி

சுயேட்சையாக போட்டி

ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் இருந்த மயில்சாமி, அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

டிவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி

டிவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி

இதில் 1400 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார் மயில்சாமி. இந்நிலையில் நடிகர் மயில்சாமி டிவிட்டரில் இணைந்துள்ளார். தனது போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ள மயில்சாமி, டிவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார்.

நாளை முதல் தடை

நாளை முதல் தடை

மேலும் நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் மயில்சாமி. இந்நிலையில் மயில்சாமி டிவிட்டரில் இணைந்ததை பார்த்த ரசிகர்கள், டிவிட்டருக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பரவும் தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

தடை பண்ண போறாங்களாம்

தடை பண்ண போறாங்களாம்

மயில்சாமி டிவிட்டரில் இணைந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப லேட் தலைவரே..ட்விட்டரை தடை பண்றதா வேற பேசிக்கறாங்க என பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சியாம்..

மகிழ்ச்சியாம்..

மற்றொரு நெட்டிசனான இவர், டிவிட்டர்ரையே முடக்க போறாங்க டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சியாம்! என குறிப்பிட்டுள்ளார்.

கடையை சாத்திருவாங்க போல

கடையை சாத்திருவாங்க போல

நாளை முதல் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவலை நாளைக்கு கடையை சாத்திருவாங்க போல இருக்கு! என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வீடியோ போடுங்கள்

வீடியோ போடுங்கள்

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் உண்மையிலேயே இது நீங்கள் தானா, உண்மை என்றால் வீடியோ போடுங்கள் என பதிவிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் கவுண்டமணி டிவிட்டரில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X