நாசருக்குள் இப்படி ஒரு துயரமா..விபத்தில் நினைவை இழந்த மகன்..மருந்துப்போட்ட விஜய்.. நெகிழ்ச்சி தகவல்!

சென்னை: தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்தையும் அதற்கு நடிகர் விஜய் போட்ட மருந்தையும் உருக்கமாக பகிர்ந்துள்ளார் நடிகர் நாசர்.

நடிகர் நாசர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஆவார். நடிராக மட்டுமின்றி இயக்குநர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பின்னணி பாடகராகவும் உள்ளார்.

நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, இங்கிலிஷ் என பல மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் நாசர்.

வேஸ்ட் பேப்பர்

வேஸ்ட் பேப்பர்

வில்லன், ஹீரோ என கலக்கிய நாசர் தற்போது சப்போர்ட்டிங் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மனோ பாலாவின் வேஸ்ட் பேப்பர் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் நாசர் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

விபத்தில் சிக்கிய மூத்தமகன்

விபத்தில் சிக்கிய மூத்தமகன்

நாசர் தனது மூத்த மகன் அப்துல் அசன் ஃபைஸல் விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்ததையும் அப்போது விஜய் செய்த நெகிழ்ச்சியான காரியத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு விபத்து

2014ஆம் ஆண்டு விபத்து

இவர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிப்பில் சினிமாவில் அறிமுகமாவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பெரும் விபத்தில் சிக்கினார் அப்துல் அசன் ஃபைஸல்.

விஜய்யை மட்டும் மறக்கவில்லை

விஜய்யை மட்டும் மறக்கவில்லை

இதில் சுயநினைவை முற்றிலும் இழந்து விட்டார். இப்போது வரை நினைவு திரும்பாத நிலையில் அவரது நினைவில் இருக்கும் ஒரே விஷயம் விஜய் மட்டும்தான் என்று கூறியுள்ளார் நாசர். எல்லாம் மறந்த போதும் விஜய்யை மட்டும் தனது மகன் மறக்கவில்லை என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

நேரடியாக வந்த விஜய்

நேரடியாக வந்த விஜய்

தனது மகன் விஜய் என்று கூறிய போதெல்லாம் அவரது நண்பர் விஜய் ஆனந்த் என்று நினைத்து அவரை அழைத்து காண்பித்ததாக கூறிய நாசர் பின்னர்தான் அது நடிகர் விஜய் என தெரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். எப்போதும் விஜய் பாடல்களை தான் பார்த்துக்கொண்டிருப்பான் என்ற அவர், இதனை அறிந்த விஜய் நேரடியாக தனது மகனை வந்து பார்த்து பேசியதையும் கூறியுள்ளார்.

கேக் வெட்டுவார்

கேக் வெட்டுவார்

மேலும் தனது மகனின் பிறந்த நாளுக்கு நடிகர் விஜய் பேசுவாரு என்றும் அவருடன் சேர்ந்து கேக் வெட்டியதையும் நினைவு கூர்ந்துள்ளார் நாசர். நாசரின் மற்ற இரண்டு மகன்களான லுத்ஃபுதீன், அபி ஹாசன் ஆகியோர் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X