twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசோலையை வங்கியில் போட்டு அதை காக்க காவல் இருந்த அப்பாவி.. நெல்லை சிவா மரணம்.. பார்த்திபன் உருக்கம்!

    |

    சென்னை: நகைச்சுவை நடிகர் நெல்லை சிவாவுடனான தனது நட்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.

    மிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்.

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    பெரும் கூட்டம்

    பெரும் கூட்டம்

    இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருநெல்வேலி பாஷையில் எதார்த்தமாக பேசும் இவரது பேச்சையும் காமெடியையும் ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் உள்ளது.

    மாரடைப்பால் மரணம்

    மாரடைப்பால் மரணம்

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் நெல்லை சிவா. 60 வயதான நெல்லை சிவா இன்று மாலை 6.30 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பார்த்திபன் உருக்கம்

    பார்த்திபன் உருக்கம்

    அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் நெல்லை சிவா குறித்த பதிவு ஒன்றை உருக்கமாக ஷேர் செய்துள்ளார்.

    அப்பாவி நெல்லை சிவா

    அதாவது, பாத்திரம் வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பவனாக இல்லாமல் பாத்திரத்தையே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கோடி கோடியாக வந்த பணம் கொண்டு மனம் பல வாங்கினேன். நான் தந்த காசோலையை வங்கியில் போட்டு அதை காக்க வங்கி வாசலில் காவல் இருந்த அப்பாவி நெ.சிவா. அவர் பேச நான் சிரிப்பேன். இன்று இல்லை என பதிவிட்டுள்ளார்.

    கிணத்தை காணோம் காமெடி

    கிணத்தை காணோம் காமெடி

    மேலும் இந்த விஷயம் தொடர்பாக நெல்லை சிவா, ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியையும் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நெல்லை சிவாவின் கிணத்தை காணோம் காமெடி பெரும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Parthiban heartfelt condoles for Nellai Siva demise. Comedy actor Nellai Siva passed away due to heart attack.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X