Just In
- 49 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 56 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 1 hr ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- News
புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: தமிழகத்தில் ஒரு லிட்டர் 90ஐ கடந்தது - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சீமானை சீண்ட வைக்கப்பட்ட பெயர் அல்ல அது.. துக்களக் தர்பார் குறித்து பார்த்திபன் விளக்கம்!
சென்னை: துக்ளக் தர்பார் படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதுகுறித்து நடிகர் பார்த்திபன் டிவிட்டியுள்ளார்.
தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 'துக்ளக் தர்பார்' படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டது.

ராசிமான்
இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த டீஸர் நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதாவது துக்ளக் தர்பார் படத்தில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

படக்குழுவுக்கு எச்சரிக்கை
ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் என்று எண்ணி படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஒரு காட்சிக்கூட ஓடாது
அதாவது, இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குநர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அப்புறப்படுத்தப்படுவீர்கள்
இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள். இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகு விரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள் என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

எக்கட்சியையும் சார்ந்தவனல்ல
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக'துக்ளக் தர்பார்'குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல

பெயரை மாற்ற முயற்சி
சார்ந்தவனல்ல.(புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்'நாம் தமிழர்' தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன்.எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர்பிரச்சனையை இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.