'பந்திக்கு பிந்து பாராட்ட முந்து'... வழக்கம் போல் தன் ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய பார்த்திபன்!

பத்ம விருது பெற்றவர்களுக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை: பத்ம விருது பெற்றவர்களுக்கு நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைலில் வாழ்த்து கூறியுள்ளார்.

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பத்ம விருது பெற்றோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பங்காரு அடிகளார், பிரபுதேவா, மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Actor Parthiban wishes padma awardees

மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து விருது பெற்றவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் பார்த்திபனும் தனது வழக்கமான ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், "பத்மஸ்ரீ பெற்றுள்ள நண்பர் பிரபுதேவா,டிரம்ஸ் சிவமணி சின்னபுள்ளையம்மா -வாழ்த்துக்கள்! ஐஸ்வர்யாராய் உலக அழகியான போது நான் சின்னபுள்ளையம்மாவை இந்த பிரபஞ்ச அழகியாக அறிவித்து வருடத்திற்கு தேவையான புடவை பல பரிசுகளை ட்ரங்க் பெட்டியில் வழங்கி மகிழ்ந்தேன். பந்திக்கு பிந்து பாராட்ட முந்து", எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X