அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கிறது… மு.க.ஸ்டாலினை பாராட்டிய பவன் கல்யாண்!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில், அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாக ஸ்டாலினை, பவன் கல்யாண் வெகுவாக பாராட்டி உள்ளார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

1971ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லாவில் பிறந்தவர் பவன் கல்யாண். தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்ஜீவியின் தம்பி பவன் கல்யாண். இவரின் இயற்பெயர் கொனிடெல்லா கல்யாண் பாபு.

சினிமாவில் அறிமுகம்

சினிமாவில் அறிமுகம்

சிரஞ்ஜீவி போலவே 1996ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் இவரின் பயணத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்தவர் சிரஞ்ஜீவிதான் என்றாலும், தன் முதல் படத்தில் அறிமுகத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டார். அதற்கு அடுத்து தன் முயற்சியாலும், நடிப்பாலும் ஆந்திர மக்களின் மனதை கவர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்து பவர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவுக்கு தேவையான மசாலா பார்மட் படங்களை நடித்து கொண்டே எதார்த்த சினிமாவிலும் நடித்து அசத்தி வருகிறார்.

ஜன சேனா

ஜன சேனா

2008ம் ஆண்டு சிரஞ்ஜீவிபிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டி இட முடிவு செய்தார். இதையடுத்து சிரஞ்ஜீவி திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். சீரஞ்ஜீவியின் வெற்றிக்காக பவன் கல்யாண் பல கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதனிடையே அண்ணனின் அரசியல் போக்கு பிடிக்காமல் ஜன சேனா என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் பவன் கல்யாண். இளம் தலைமுறையினரின் மனதை கவர பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

முதல்வருக்கு கடிதம்

முதல்வருக்கு கடிதம்

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பணிக்காக பாராட்டியுள்ள பவன் கல்யாண் ஒரு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.எம்.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்

பவன்கல்யாண் தற்போது, மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தை சாகர் சந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X