டப்பிங் யூனியன் பாலியல் சர்ச்சை.. அந்த பெண் சொல்வது பொய்.. ராதா ரவி கண்டனம்!

சென்னை: டப்பிங் கலைஞர் சங்கீதா, சாஜி என்பவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் அது குறித்து, டப்பிங் யூனியன் செயலாளர் கதிரவன் பாலுவிடம் புகார் கொடுத்தேன். அவரோ மேம்போக்காக விசாரித்துவிட்டு இனி அவர் வேலைக்கு கூப்பிடமாட்டார். அவர் கூப்பிட்டாலும் நீங்கள் செல்ல வேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் என்ன சார், நான் புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்படி ஒரு தீர்வை தருகிறீர்களே என்றேன். அதற்கு அவர் "நீங்கள் சட்ட ரீதியிலாக சென்றால் நான் உங்களை யூனியனில் இருந்து நீக்கிவிடுவேன் என மிரட்டினார் என்றார். அதுமட்டுமில்லாமல், ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் சங்கத் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது டப்பிங் யூனியனில் மீட்டிங்கில் என்னை தாக்கினார்கள் இதுகுறித்து நான் புகார் கொடுத்தேன்.

ஆதாரங்களோடு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வழக்கை முடித்துவிட்டார்கள். செயலாளர் கதிரவனும் பெண்களிடம் அசிங்கமாகவே பேசுவார். இதை ராதாரவி தட்டி கேட்க மாட்டார் என டப்பிங் கலைஞர் சங்கீதா அடுக்கடுக்கான புகார் கூறியிருந்தார். இந்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையில் இன்று டப்பிங யூனியனின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய யூனியன் செயலாளர் கதிரவன் பாலு, டப்பிங் கலைஞர் சங்கீதா இப்பொழுது மீடியாக்களுக்கு அளிக்கும் பேட்டியில், பல ஆதாரங்களையும் ஸ்கிரீன்ஷாட்களையும் எடுத்து வைத்து பேசுகிறார். ஆனால், எங்களிடம் புகார் அளிக்கும் போது சாஜி என்பவர் பற்றி புகார் கடிதத்தை தான் கொடுத்தார். அதில் 2017 முதல் அவருடன் நான் வேலை பார்க்கிறேன் அவர் பாலியல் ரீதியாக எனக்கு தொல்லை கொடுக்கிறார் என்று தான் கூறியிருந்தார்.

Radha Ravi Dubbing Union Press Meet

செய்தியாளர்கள் சந்திப்பு: இப்போது, மீடியாக்களுக்கு கொடுக்கும ஆதாரங்களை அவர் ஏன் எங்களிடம் கொடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் சங்கீதா அளித்த புகாரின் பேரில், இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அந்த விசாரணையும் குற்றம் சாட்டப்பட்ட சாஜி ஆஜரானார். ஆனால், புகார் கொடுத்த சங்கீதா ஆஜராகவில்லை. அவர் ஆஜராகத்திற்கு என்ன காரணம், விசாரணைக்கு ஆஜரானால் தானே என்ன நடந்தது என்று தெரியும். இருந்த போதும், சாஜி மீது நடவடிக்கை எடுத்து அவரை நீக்கி இருக்கிறோம். இதுகுறித்து உரிய விசாரணை நடந்த வருகிறது. அதேபோல, சங்கீதா, சாஜி மீது பாலியல் புகார் கொடுத்ததால், தன்னை டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டதாக கூறியிருக்கிறார். அது உண்மை இல்லை, அந்த பெண் சாஜி, மீது புகார் கொடுத்தது 2020 ஆம் ஆண்டு. சங்கீதா நீக்கப்பட்டது 2023 ஆம் ஆண்டு. அதற்கு காரணம் டப்பிங் யூனியன் மீட்டிங்கில் நடக்காததை தப்பு தப்பா பேசி, பொய்யா புகார் அளித்ததால் 2023 ஆம் ஆண்டு அவரை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினோம். அடுத்தடுத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்க, செய்தியாளர் சந்திப்பில் கடுமையான வாக்கு வாதம் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X