Don't Miss!
- News
‛111’ போதாது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 புதிய பொறுப்பாளர்கள்.. டப் கொடுக்கும் எடப்பாடி-லிஸ்ட்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஆர்ஆர்ஆர் தான் எனது கடைசி படம்...அறிவிப்பில் அதிர்ச்சி கொடுத்து பிரபல நடிகர்
ஐதராபாத் : ஆர்ஆர்ஆர் படம் தான் தனது கடைசி படம் என பிரபல தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
குறும்படங்கள், வெப்சீரிஸ் பலவற்றிலும் நடித்துள்ள ராகுல், ஆர்ஆர்ஆர் படத்துடன் விரத பர்வம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை துவங்கிய ராகுல், குறும்படங்கள், தியேட்டர் ஆர்டிஸ்ட்கள் குழுவில் இணைந்து சிறிய ரோல்களில் நடித்து வந்தார். நடிப்புடன், திரைக்கதை வசனமும் எழுதி வந்தார்.
இந்த
தேதியில்
தான்
வெளியாகிறதா
தளபதி
விஜய்யின்
பீஸ்ட்
திரைப்படம்..
பரபரக்கும்
தகவல்கள்
Beast

படிப்படியாக வளர்ந்த ராகுல்
அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், ஹுசாரு, ப்ரோசிவரேவருரா, ஸ்கைலேப், ஆல வைகுண்டபுரமுலு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ராமகிருஷ்ணா. கடந்த ஆண்டு இவர் நடித்த NET என்ற படம் ஜீ5 ல் வெளியிடப்பட்டது. காமெடி உள்ளிட்ட பல ரோல்களில் நடித்துள்ளார் ராகுல் ராமகிருஷ்ணா.

ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய ரோல்
ராகுல் ராமகிருஷ்ணா ஹீரோவாக நடித்த ஜதி ரத்னலு படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ஜதி ரத்னலு படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் மிகவும் வெயிட்டான ரோலில் நடித்துள்ளார் ராகுல். 2022 ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஆர்ஆர்ஆர் படமும் ஒன்று.

இனி நடிக்க மாட்டேன்
இந்நிலையில் இன்று ராகுல் தனகு ட்விட்டர் பக்கத்தில், 2022 ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நான் நடிக்க போவதில்லை. ஆர்ஆர்ஆர் நான் கடைசியாக நடித்த படங்களில் ஒன்று. இதற்கு மேல் எந்த படமும் நடிக்க மாட்டேன். நான் இதற்காக கவலைப்படவில்லை. இதற்காக வேறு யாரும் கவலைப்பட வேண்டாம் என ராகுல் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video

எதற்காக இந்த முடிவை எடுத்தார்
வளர்ந்து வரும் நடிகரான ராகுல் திடீரென எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தார் என தெரியவில்லை. என்ன காரணத்திற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது பற்றி விரிவாக ட்விட்டர் பதிவில் எதையும் குறிப்பிடவில்லை. இதனால் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பயங்கர அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர்.