twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய ரஜினி மகள்!

    |

    சென்னை: கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.

    Recommended Video

    கொரோனா நிதியாக 1 கோடி வழங்கிய Rajinikanth மகள் Soundarya | Tamil Nadu CM's Relief Fund

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் உட்பட மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

    ரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து!ரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து!

    கொரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    முதல்வர் கோரிக்கை

    முதல்வர் கோரிக்கை

    இந்நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

    சன்டிவி குழுமம்

    சன்டிவி குழுமம்

    இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். சன் டிவி குழுமம் தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கியது. இதேபோல் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு கோடி வழங்கினர்.

    ரஜினி மகள்

    ரஜினி மகள்

    நடிகர் அஜித், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். இயக்குநர் சிஎஸ் அமுதன் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

    நிறுவனத்தின் சார்பாக

    நிறுவனத்தின் சார்பாக

    தனது நிறுவனத்தின் சார்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சவுந்தர்யா மே 6 எண்டெர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சவுந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Rajinikanth daughter Soundarya donates one crore for CM relief fund. CM MK Stalin request to donate for corona relief fund.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X