விவாகரத்தாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரஞ்சித் - பிரியா ராமன்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் ரஞ்சித்தும் நடிகை பிரியா ராமனும் விவாகரத்து செய்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பொன் விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

1990களில் பிரபல நடிகராக வலம் வந்தார் ரஞ்சித். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில்

தொடர்ந்து படங்களில்

தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்துள்ளார் ரஞ்சித். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ரஞ்சித்.

பிரியா ராமன்

பிரியா ராமன்


ரஞ்சித் நடிகை பிரியா ராமனுடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

திருமணம்

திருமணம்

இதனை தொடர்ந்து 1999ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியா ராமனும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் பிஸியாக

படங்களில் பிஸியாக

ரஜினிகாந்தின் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பிரியா ராமன். நடிகர் ரஞ்சித்தும் பிரியா ராமனும் படங்களில் பிஸியாக இருந்தனர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

அப்போது திரைப்படம் தயாரிக்கும் பணியில் இறங்கிய ரஞ்சித் பல கோடிகளை இழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சி


கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் பிரியா ராமன்.

செந்தூரப் பூவே

செந்தூரப் பூவே

அதனை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் அகிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித்தும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப் பூவே சீரியலில் நடித்து வருகிறார்.

மீண்டும் இணைந்த ஜோடி

மீண்டும் இணைந்த ஜோடி

இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு ரஞ்சித் - பிரியா ராமன் ஜோடி சுமார் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களின் திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.

இருவரும் செல்பி

இருவரும் செல்பி

மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். தனது மனைவியை கட்டியணைத்தப்படி செல்பி எடுத்துள்ள ரஞ்சித் அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நன்றிகள் கோடி தங்கங்களே

நன்றிகள் கோடி தங்கங்களே

அதில், உங்கள் அன்பு வாழ்த்தினில் அகம் மகிழ்கிறேன்
நன்றிகள் கோடி தங்கங்களே!! என பதிவிட்டு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் நடிகர் ரஞ்சித். இந்த போட்டோவை பிரியா ராமனும் லைக் செய்துள்ளார்.

நன்றியும் மகிழ்ச்சியும்

நன்றியும் மகிழ்ச்சியும்

இதேபோல் இருவரும் இணைந்திருக்கும் மற்றொரு போட்டோவை ஷேர் செய்துள்ள ரஞ்சித் அந்த போட்டோவுக்கு என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால் எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி தங்கமே

நன்றி தங்கமே

இதேபோல் ரஞ்சித்துடன் எடுத்த போட்டோக்களை பிரியா ராமனும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை லைக் செய்துள்ள ரஞ்சித் அன்பு நன்றி தங்கமே என பதிவிட்டுள்ளார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்


விவாகரத்துக்கு பிறகும் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Read more about: ranjith priya raman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X