Vijay: விஜய் மூளையில் பிரச்சினை இருக்கு.. நடிகர் ரஞ்சித் கடும் தாக்கு!
சென்னை: இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஞ்சித், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனார். இதில், பேசிய நடிகர் ரஞ்சித், தவெக தலைவர் விஜய்யை ஒருமையில் பேசி இருந்தார். இது இணையத்தில் தற்போது புயலை கிளப்பி உள்ளது.
மூளையில் ஏதோ பிரச்சனை : மாநாட்டில் பேசிய ரஞ்சித், விஜய் அவர்கள் நடத்திய மாநாட்டில், கையை உயர்த்தி சொடக்கு போட்டுக்கொண்டே ஒற்றை விரலை நீட்டி மோடி ஜி என பேசி இருந்தார். 2014 ஆம் ஆண்டு கோவை கொடிசியா மைதானத்தில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது, எதுவுமே தெரியாமல் கையை கட்டிக்கொண்டு பூனை குட்டி போல் அமர்ந்த இருந்தார் நடிகர் விஜய். இப்போது, இஸ்லாமிய சகோதரர்களுக்கும், இஸ்லாம் மதத்திற்கும் துரோகம் இழைக்க வந்ததா ஒன்றிய அரசு என கேட்கிறார். ஆனால், அன்று கொடிசியா மைதானத்தில் என்ன கோரிக்கையை முன் வைத்தீர். கச்சத்தீவு மீட்க வேண்டும் என்றீர்களா, மீனவர்களின் நலன் பற்றி கேட்டீர்களா, கல்வியை சமத்துவமாக்க வேண்டுமென்று கேட்டீர்களா, இல்லை கள்ளச்சாராயம் அதிகமாகிவிட்டது அதை தடுக்க வேண்டும் என பேசுனீர்களா.. அன்று இப்படி அவரிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவரை சந்தித்ததற்கான காரணம் அவருடைய 'தலைவா' படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக வந்தார். தம்பி விஜய் அவர்கள் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் என்பது போல, பல விஷயங்களை மறந்து விட்டார். அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என நினைக்கிறேன்.

இதுதான் அரசியல் நாகரீகமா: ஒரு வாக்காளர், நான் ஒரு குடிமகன், எனக்கு அப்பா மோடி தான். மிஸ்டர்... மிஸ்டர் என கையை அசைத்து மோடி பெயெரை சொல்லும் போதெல்லாம் நான் மிகவும் வேதனை அடைந்தேன். இன்று உலக நாடுகளே வியந்து வியந்து பார்க்கக்கூடிய அமெரிக்கா, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அமெரிக்காவே வியந்து பார்க்கக்கூடிய ஒரே பிரதமர் யார் என்றால் அது மோடி தான். மிஸ்டர் மோடினு சொடக்கு போட்டு பேசுற, முதல்வரை அங்கிள்னு சொல்லுற இதுதான் அரசியல் நாகரீகமா. நீ இப்படி இருந்தால், உன்னை நம்பி வந்தவர்கள் அதைத்தான் பின் பற்றுவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என நடிகர் ரஞ்சித் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











