»   »  கையில் பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற நடிகர்: எல்லாம் பப்ளிகுட்டிக்காக

கையில் பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற நடிகர்: எல்லாம் பப்ளிகுட்டிக்காக

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ரவி பாபு ஹைதராபாத்தில் உள்ள ஏடிஎம் முன்பு கையில் பன்றிக்குட்டியுடன் வரிசையில் நின்றுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் உள்ள ஏடிஎம் மையங்கள் முன்பு எப்பொழுது பார்த்தாலும் நீண்ட வரிசை உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் ரவி பாபு ஹைதராபாத்தில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க கையில் பன்றிக்குட்டியுடன் வந்து வரிசையில் நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரவி

ரவி

ரவி அதுகோ என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் பன்றிக்குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இதனால் விளம்பரத்திற்காக ரவி அப்படி செய்திருப்பார் என்று கூறப்படுகிறது.

பன்றிக்குட்டி

பன்றிக்குட்டி

தற்போது எல்லாம் நான் எங்கு சென்றாலும் பன்றிக்குட்டியுடன் தான் செல்கிறேன். பன்றிக்குட்டியை வீட்டில் தனியாக விட முடியாது. அதை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என ரவி தெரிவித்துள்ளார்.

பணம்

பணம்

பணம் தேவைப்பட்டது அதனால் பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் சென்றேன். பன்றிக்குட்டியை பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டாலும் அது பற்றி யாரும் பிரச்சனை எதுவும் செய்யவில்லை என்கிறார் ரவி.

பண்ணை

பண்ணை

படத்திற்காக என் நண்பனின் பண்ணையில் சில பன்றிக்குட்டிகளை வளர்த்து வருகிறேன். இந்திய படம் ஒன்றில் பன்றிக்குட்டியை நடிக்க வைப்பது இது தான் முதல் முறை என்று ரவி கூறியுள்ளார்.

Read more about: atm, ஏடிஎம்
English summary
Actor-filmmaker Ravi Babu on Tuesday made a public appearance with a piglet in Hyderabad, much to the surprise of the general public. He had come to withdraw cash from an ATM. The piglet plays the central character in his upcoming Telugu film, 'Adhugo'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil