»   »  பிரபல நடிகரின் தம்பி சாலை விபத்தில் பலி

பிரபல நடிகரின் தம்பி சாலை விபத்தில் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சாலை விபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் ராஜ் பலியானார்.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் ராஜ். அண்ணனை போன்று தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு பரத் தனது சிவப்பு நிற ஸ்கோடா காரில் ஹைதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் இருந்து கச்சிபவுளிக்கு தனியாக சென்றுள்ளார்.

Actor Ravi Teja's brother dies in road accident

அவுட்டர் ரிங் ரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பரத்தின் கார் மோதியது. இதில் பரத் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Actor Ravi Teja's brother dies in road accident

முன்னதாக பரத்தை கொகைன் போதைப் பொருள் வைத்திருந்ததற்காக ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tollywood actor Ravi Teja's brother Bharath Raj died in a road accident after his car hit a stationary lorry in Hyderabad last night.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil