33 வயதில் அகால மரணம்.. சினிமாவில் ஜெயித்து நிஜத்தில் வீழ்ந்த.. சிந்துவின் கண்ணீர் கதை!

சென்னை: சினிமா மற்றும் சீரியல்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் தான் சிந்து. தமிழ் சினிமாவில் 150க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சிந்து, பல சீரியல்களிலும் நடித்து பெயர் எடுத்தார். கதாநாயகி, வில்லி, குணசித்திர கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில், தாய்மை உள்ளத்தோடு பலருக்கு ஓடி ஓடி பலருக்கு உதவி செய்த சிந்து தனது 33 வது வயதிலேயே உயிரிழந்தார். அவரைப் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

1971 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி சென்னையில் பிறந்தவர் தான் நடிகை சிந்து. வெங்கட சுப்பிரமணியம் மற்றும் சியாமளா தம்பதிகளுக்கு மூத்த மகளாக பிறந்தார். இவருடைய தம்பி தான் நடிகர் சஞ்சீவ். தன்னுடைய 18வது வயதிலேயே சினிமாவில் நடிகையாக அறிமுகமான சிந்து, கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான பொன்மனச் செம்மல் என்ற திரைப்படத்தில், ஜெய்சங்கரின் மகளாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

sindhu sanjeev painful story
Photo Credit:

நடிகை சிந்து: அதன்பின், விஜயகாந்துக்கு மிகப்பெரிய அளவு வெற்றியை தேடி தந்த புலன் விசாரணை திரைப்படத்தில் சிந்து என்ற கதாபாத்திரத்திலேயே நர்சாக நடித்திருந்தார். அதே தொடர்ந்து அர்ஜுனுக்கு ஜோடியாக பாட்டாளி மகன் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். சிந்துவுக்கு மிகப்பெரிய அளவில் பெயரை தேடித்தந்த படம் 'இணைந்த கைகள்' திரைப்படம் தான். இந்த படத்தில் தண்ணீர் லாரிக்குள் 'மலையோர குயில் கூவ கேட்டேன்' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சிந்துவின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லாம். அந்த படத்திற்கு பின் அடுத்தடுத்து கதாநாயகியாக நடித்து வந்த சிந்துவிற்கு, திடீரென சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியதால், ஆஹா என்ன பொருத்தம், சூரிய பார்வை, நம்ம ஊரு ராசா, பிஸ்தா போன்ற திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரம், வில்லி, அண்ணி, அக்கா போன்ற ரோலில் நடித்தார்.

sindhu sanjeev painful story
Photo Credit:

33 வயதில் மரணம்: சினிமா மட்டுமில்லால் சீரியலில் கொடி பறந்த சிந்து, மெட்லி ஒலி, அண்ணாமலை, கோகுலம் வீடு, எங்கள் வீடு, தோழிகள், ஆனந்தம், சூர்யவம்சம் என சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளில் மனதிம் இடம் பிடித்தார். சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த போதே, ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஷ்ரேயா என்ற மகள் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு ஜனவரி 6ந் தேதி ஷ்ரேயாவிற்கு 9 வயதாக இருந்த போது, சிந்து ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக 33 வயதிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி சிந்து உதவிகளை செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கேட்டு வீடு வீடாக அலைந்து வந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சிந்து மரணத்திற்கு பிறகு, தன்னுடைய அக்கா மகள் ஷ்ரேயாவை வளர்ந்து அவருக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறார் சிஞ்சீவ். சிந்துவின் மகள் ஷ்ரேயா அஸ்வின் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஸ்வின் ராம் அன்பறிவு மற்றும் டார்லிங் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X